Saturday, July 27, 2024
Home > செய்திகள் > மதமாற்ற குற்றசாட்டு..! அன்னைதெரேசா மிஷனரி அமைப்புக்கு ஆப்படித்த காவல்துறை..!

மதமாற்ற குற்றசாட்டு..! அன்னைதெரேசா மிஷனரி அமைப்புக்கு ஆப்படித்த காவல்துறை..!

15-12-21/12.03PM

குஜராத் : அன்னைதெரேசாவால் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி ஆப் சேரிட்டி அமைப்பு இந்து மத மாணவ மாணவியர்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி எழுந்த புகாரை அடுத்து காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலம் வாதோராவில் மிஷனரி ஆப் சேரிட்டி அமைப்புஇயங்கிவருகிறது. இந்த அமைப்பு வாதோராவில் ஒரு தாங்கும் விடுதி ஒன்றை நடத்திவருகிறது. இங்கு தங்கும் மாணவியர் மற்றும் இளம்பெண்களை கட்டாயமாக கழுத்தில் சிலுவை அணியச்சொல்லியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் அங்கு தாங்கும் பெண்களை கிறித்தவத்திற்கு மாறி கிறித்தவரை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக பாதுகாப்பு அதிகாரியை அணுகினர். அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வதோராவில் உள்ள மகர்புரா காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 295A . 298, குஜராத் மத சுதந்திர சட்டம் 2003, மதமாற்ற தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய புகார் கொடுத்த சமூக பாதுகாப்பு அதிகாரி மயங்க் திரிவேதி கூறுகையில்,

`

“தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தி வந்ததாலும் இளம்பெண்களை கிறித்தவமதத்திற்கு மாற்ற முயற்சித்ததாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்னை அணுகினர். சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க எல்லா முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என குறிப்பிட்டார்.

```
```

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அன்னைதெரேசா அமைப்பு இழுத்து மூடப்படுவதுடன் ஒரு லட்சம் வரை அபராதமும் நான்கு வருட சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போபால் விஷவாயு தாக்கி பல்லாயிரம் மக்கள் இறந்து கிடக்கையில் அன்னை தெரேசாவிடம் நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பியதாகவும் அதற்க்கு பதிலளித்த அன்னை தெரேசா ” அவர்கள் கடவுளின் குழந்தைகள். மதமாற்றம் செய்ய முடியாத இடத்தில் எனக்கென்ன வேலை” என கூறியதாக ஊகங்கள் உலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா