Saturday, October 5, 2024
Home > அரசியல் > நம்ம கூட ஒரண்டை இழுக்கறதே வேலையா போச்சு..! வடிவேலு பாணியில் காங்கிரசை கதறவிட்ட பிஜேபி..!

நம்ம கூட ஒரண்டை இழுக்கறதே வேலையா போச்சு..! வடிவேலு பாணியில் காங்கிரசை கதறவிட்ட பிஜேபி..!

மத்திய பிஜேபி அரசு நாட்டின் உட்கட்டமைப்பை சீரமைக்கும் அதே வேளையில் மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டெடுப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரை மேஜர் தயாள்சந்த் விருது என மாற்றியமைத்தது.

இதை தொடர்ந்து தற்போது அஸ்ஸாம் மாநிலம் ராஜீவ்காந்தி தேசிய பூங்கா எனும் பெயரை மீண்டும் பழைய பெயரான ஓராங் தேசிய பூங்கா என மாற்றியமைக்க உள்ளது. இதற்க்கு கேபினட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. 79 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்த பூங்கா பல விலங்குகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

`

இந்தியாவிலேயே புலிகள் அதிகம் வாழும் சரணாலயம் மற்றும் ரினோஸ் அதிகம் வாழும் சரணாலயம் இதுவாகும். இந்த பெயர்மாற்றம் குறித்து அரசு செய்தி தொடர்பாளர் பிஜூஸ் கூறுகையில் “அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆதிவாசிகளின் கோரிக்கையை அடுத்து பழைய பெயரான ஓராங் தேசிய பூங்கா என மாற்ற அமைச்சரவை ஒப்போதல் அளித்துள்ளது” என தெரிவித்தார்.

```
```

அஸ்ஸாம் காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் பூபென் போரா கூறுகையில் ” 1999ல் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜீவ்காந்தி நினைவாக ஓராங் பூங்காவிற்கு ராஜிவ் பெயரை சூட்டியது. ஆனால் தற்போதைய பிஜேபி அரசு இந்தியாவுக்குள் கணினியை கொண்டு வந்து மறுமலர்ச்சியை உருவாக்கியது ராஜிவ் என்பதை மறந்து அரசியல் செய்கிறது. அவர்களால் பெயரை வேண்டுமானால் நீக்கமுடியும். மக்கள் மனதிலிருந்து காங்கிரசை நீக்க முடியாது” என கூறினார்.

…உங்கள் பீமா