Wednesday, May 20, 2026
Home > அரசியல் > அடடா இப்படியா சொன்னார் அமைச்சர்..! கதறும் திருமாவளவன்..!

அடடா இப்படியா சொன்னார் அமைச்சர்..! கதறும் திருமாவளவன்..!

13-2-22/12.50pm

புதுச்சேரி : ஹிந்து என காட்டிக்கொண்டு ஹிந்துமதத்தை கேவலமாக விமர்சிப்பதும் கோவில்களில் காணப்படும் சிலைகளை ஆபாசமாக வர்ணிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ள திருமாவளவன் சமீபத்தில் ஹிந்துக்களின் புனிதநூல்களான ராமாயணம் மஹாபாரதம் மற்றும் பகவத்கீதையை இதிகாச குப்பைகள் என வர்ணித்திருந்தார்.

நேற்று முன்தினம் புதுசேரியில் 30 மாநிலத்தை சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் பங்கேற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சியை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களை புதுச்சேரி பிஜேபி தலைமையகத்தில் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவனின் முறையற்ற பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

செய்தியாளர்களிடம் “இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் பிடிக்கப்படும்[போது மத்திய அரசே முனைப்புடன் செயல்பட்டு அவர்களை மீட்டெடுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என மக்களுக்கு தெரியும். மத்தியில் பிஜேபி வந்த பின்னர் இதுவரை எந்த ஓரு துப்பாக்கி சூடு சம்பவமும் நடைபெறவில்லை. மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது.

ராமாயணமும் மகாபாரதமும் இந்திய தேசத்தின் இதிகாசங்கள். நம்முடைய மூதாதையர்கள் அதை நன்னெறி இதிகாசங்களாக போற்றி வாங்கியுள்ளனர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் ஒருவர் பிஜேபியில் இருந்தால் அவரை சுயநலவாதி என திருமாவளவன் கூறியிருக்கிறார். முதலில் அவர் எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் இருக்கிறாரா என்பதை அவர் ஆய்வுக்குட்படுத்தவேண்டும்.

பிஜேபி பட்டியலின மக்களுக்கு பாகுபாடில்லாமல் பதவியை கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் பட்டியலின அமைச்சர் எங்கே இருக்கிறார். எங்கே போனது சமூக நீதி. திமுக கூட்டணியில் இருக்கிறாரே அவர்களிடம் கேட்கலாமே. பட்டியலின அமைச்சர்கள் கடைசி இடத்தில் இருப்பது நியாயம் என கேள்வியெழுப்பலாமே. இது சுயநலமில்லையா. பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்கு தமிழக உள்துறை அமைச்சர் பொறுப்பை வழங்கவில்லையே ஏன் என கேள்வியெழுப்பினரா திருமாவளவன்.

திருமவளவனிற்கு பயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிநாட்டிலும் புதுச்சேரியிலும் பட்டியலின மக்கள் அதிகமாக பிஜேபியில் இணைகின்றனர். எந்த கிராமத்திற்கு சென்றாலும் பாஜக கொடி பறக்கிறது. திருமாவளவன் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவேண்டும் என்ற நோக்கில் பேசிவருகிறார். இத்தனை நாட்கள் பட்டியலின மக்களை ஏமாற்றினோம். இனி முடியாது என்கிற பயத்தில் பேசுகிறார்” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா