Sunday, December 3, 2023
Home > செய்திகள் > அத்திவரதருக்கு செருப்பு மாலை அணிவித்த திகவினர்..!காஞ்சிபுரத்தில் பதட்டம்..!

அத்திவரதருக்கு செருப்பு மாலை அணிவித்த திகவினர்..!காஞ்சிபுரத்தில் பதட்டம்..!

இன்று இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு நல்ல புத்தி வழங்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி நல்ல முறையில் நடைபெற வேண்டியும் அனைத்து கோவில்களிலும் பிராத்தனை நடைபெற்றது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரம் விஷ்ணு காஞ்சி, சங்குபானி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றபோது அங்கு தேங்காய் கடை வைத்திருந்த திராவிடர் கழகத்தை சேர்ந்த பூபதி என்ற நபர், அத்திவரதர் புகைப்படத்தின் மீது செருப்பு வைத்து ,கடை முன்பகுதியில் வைத்தார். இதனை தட்டி கேட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்களை இழிவாக பேசி, தாக்குதல் நடத்தினார் என்று கூறப்படுகிறது.

மேலும் “அப்படி தான்செய்வோம் இது எங்கள் ஆட்சி” என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

`

இதுகுறித்து பேசிய இந்து அமைப்பினர் “இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் கடவுளை இழிவு படுத்தும் இது போன்ற சமூக விரோதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமுதாய கோவில்களில் இவர்களின் கடை எப்படி நடைபெறுகின்றது. யார் இவர்களுக்கு அந்த இடத்தில் கடை போட அனுமதியளித்தது. கடவுள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று கூறுபவனுக்கு என்ன வேலை.” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கின்றனர்.

```
```

திமுக அரசு இந்துவிரோத போக்கில் செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் திமுகவின் பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை.

…உங்கள் பீமா