Saturday, April 1, 2023
Home > அரசியல் > இது கூட தெரியலையா..? மதுரை எம்பியை வெளுத்து வாங்கிய மத்திய அமைச்சர்..!

இது கூட தெரியலையா..? மதுரை எம்பியை வெளுத்து வாங்கிய மத்திய அமைச்சர்..!

23-12-21/11.50am

டெல்லி : மத்திய அமைச்சர் ஜ்யோதிராதித்ய சிந்தியா மதுரை எம்பியான சு.வெங்கடேசனை தனது ட்விட்டர் பதிவில் வெளுத்துவங்கிவிட்டார். மத்திய அமைச்சர் ஒருவர் நேரடியாக தமிழக எம்பி ஒருவரை குறிப்பிட்டு பதிலடி கொடுத்தது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

நேற்று சு.வெங்கடேசன் பேட்டியளித்த வீடியோ ஒன்று தமிழகத்தில் வைரலானது. மேலும் தமிழக ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு செய்தியை ஒளிபரப்பின. அந்த பேட்டியில் மத்திய அரசு மதுரைக்கு சர்வதேச விமானங்களை இயக்க ஒப்புக்கொள்ளவில்லையென்றும் பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு மறுத்துவிட்டது என்றும் வாய் கூசாமல் வாய்க்கு வந்தபடி கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் பேசியிருப்பதாக தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z

இதற்க்கு பதிலடி கொடுத்த ஜ்யோதிராதித்ய சிந்தியா ” வெங்கடேசனின் இந்த பேச்சு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் வடக்கு மற்றும் தெற்கில் உத்திரபிரதேசம் மற்றும் கேரளாவில் மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதாக கூறியுள்ளது உண்மைக்கு புறம்பானது.

`

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சில காரணிகளை கொண்டே பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எந்த மாநிலமாக இருந்தாலும் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முன்வரலாம் என்று. அதை வெங்கடேசன் குறிப்பிட மறந்து ஏன். மேலும் மதுரையிலிருந்து பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகையில் பன்னாட்டு விமானங்கள் வராதது போல பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

மதுரையிலிருந்து மேலும் பன்னாட்டு விமானங்களை இயக்க சிவில் ஏவியேஷன் மினிஸ்ட்ரிக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் வீணான வதந்தி பரப்புவது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா