Friday, March 29, 2024
Home > செய்திகள் > மீண்டும் கடத்தல் பூகம்பம்…!! சிபிஐ விசாரணைக்கு மறுத்த உயர்நீதிமன்றம்..!

மீண்டும் கடத்தல் பூகம்பம்…!! சிபிஐ விசாரணைக்கு மறுத்த உயர்நீதிமன்றம்..!

கேரள ஆளுங்கட்சியான சிபிஐஎம் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் தங்க கடத்தல் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அதை தொடர்ந்து தற்போது மரக்கடத்தல் புகார் எழுந்துள்ளது.

எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் இயற்கை ஆர்வலர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் ஷாஜி தலைமையில் நடைபெற்றது.

மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் SITயை வழக்கை விரைந்து முடிக்குமாறும் சிபிஐக்கு வழக்கை மாற்ற முடியாது எனவும் உத்தரவிட்டது. இது குறித்து பொதுநலவழக்கு தொடுத்த இயற்கை ஆர்வலர் பேசுகையில், “அரசு 24-10-20ல் விவசாயிகளுக்கு உதவுதல் என்ற போர்வையில் அனுமதிக்கப்படாத காடுகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் மேலும் புறம்போக்கு நிலங்களில் இருந்து மரங்கள் வெட்டப்படுவதை அனுமதித்திருப்பதாக சொல்கிறது.

அனால் அந்த GOIயில் அரசுக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே மரம் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புறம்போக்கு மற்றும் காடுகளில் உள்ள ரோஸ்வுட் தேக்கு மரங்களை வனத்துறை அமைச்சரின் ஆசிர்வாதத்துடன் வெட்டி எடுக்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் அமைச்சர் என பலர் இதற்க்கு உடந்தையாக இருக்கின்றனர்.

`

ஆளும் அரசுக்கு எதிராக குற்றப்பிரிவு காவல்துறையின் நடவடிக்கை எடுக்குமா என்பதை சந்தேகமே. அதனால் நீதிமனப்பிரத்தை அணுகினேன். குற்றப்பிரிவிடமிருந்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வழக்கு தொடுத்தும் பயனில்லை.” என கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறுகையில் ‘2019-2020ல் மட்டுமே 1400 கோடி மதிப்பிற்க்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டிருக்கின்றன. கடந்த தேர்தலின் போதே இதை வெளிச்சம் போட்டு காட்டினோம். இந்த வருடம் ஆறு மாதங்களுக்குள்ளாகவே பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டிருக்கிறது.

```
```

இது குறித்து புகார் அளித்தோம். காவல்துறை மரக்கடத்தல் குற்றத்திற்காக 56 பேரை கைது செய்திருப்பதாகவும் மரக்கடத்தல் தனிப்பிரிவு அமைத்திருப்பதாகவும் வனத்துறை அமைச்சன் சார்பில் சொல்லப்படுகிறது.” என தெரிவித்தார்.

மேலும் பிஜேபி தரப்பில்” தங்க கடத்தலை விட மெகா கடத்தல் இது. அரசு கள்ள மௌனம் சாதிக்கிறது. காடுகளை அழித்து சுற்றுப்புற சூழல் பாதிப்படைய அரசு காரணமாக உள்ளது. விரைவில் வனத்துறை அமைச்சருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.” என கூறுகிறது.

…உங்கள் பீமா

image credit ; indian express