Sunday, December 3, 2023
Home > அரசியல் > தமிழக நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் உள்துறை அமைச்சகம்..! முதல்வர் கூட்டத்துக்கு போகாமல் நழுவிய தமிழக முதல்வர்..!

தமிழக நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் உள்துறை அமைச்சகம்..! முதல்வர் கூட்டத்துக்கு போகாமல் நழுவிய தமிழக முதல்வர்..!

16-11-21/7.13am

ஆந்திரா : திருப்பதியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான தென்மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் போகாமல் நழுவிவிட்டார்.

நேற்று நடந்த தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா மாநிலங்களில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி பேசினார். இந்திய இறையாண்மைக்கும் அரசியலமைப்புக்கு எதிரான குழுக்கள் செயல்படுவதாகவும் அகதிகள் என்கிற பெயரில் தீவிரவாத இயக்கங்கள் ஊடுருவுவது பற்றியும் பேசியதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் ஆந்திரா தெலுங்கானா அந்தமான் நிகோபார் உள்ளிட்ட முதல்வர்கள் ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பற்றிய கேள்விகள் எழுந்து விடுமோ என்கிற அச்சம் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பிஜேபி தலைவர் எஸ்.ஆர்.சேகர் தனது பதிவில், “நேற்று நடந்ததென் மாநில CM கூட்டத்திற்கு முக ஸ்டாலின் ஏன் செல்லவில்லை.
மாநில உரிமை பேசும் அறிவாலயம் தமிழ்நாட்டின் தேவைகளை நேரடியாக கேட்டிருக்கலாமே.

`

எடுத்ததெற்கெல்லாம் கடிதம் எழுதும் CM நேரடியாக கேட்கும் வாய்ப்பை ஏன் மறுத்தார். நேற்று முழுதும் சென்னையில்தான் இருந்தாரே ஏன் போகவில்லை? இதை விட அப்படி என்ன அவசர வேலை. அங்கே TN மந்திரி இவர் எழுதிக் கொடுத்ததை ஒப்பித்தார்கள். Cm போயிருந்தால் தமிழக தேவை அனைத்தையும் கேட்டிருக்கலாமே.

```
```

போகாதது தமிழ் மக்களுக்கு செய்த அநீதி இல்லையா. GST கூட்டத்துக்கு நிதியமைச்சர் போகவில்லையே. இவர்கள் வழக்கமே absentஆவது தானோ. West Zone CM கூட்டத்தில் பேச நிறைய வாய்ப்பு கிடைத்ததை போகாமல் CM தவிர்த்தது அரசியலா. அச்சமா. துரோகமா” என கிடுக்கிப்பிடி கேள்வியெழுப்பியுள்ளார்.

….உங்கள் பீமா