Friday, March 29, 2024
Home > அரசியல் > அடேங்கப்பா மதியத்துக்கப்புறமா இவ்ளோவா..! அதிரடி காட்டிய சீமானின் தம்பிகள்..!

அடேங்கப்பா மதியத்துக்கப்புறமா இவ்ளோவா..! அதிரடி காட்டிய சீமானின் தம்பிகள்..!

நாம்தமிழர் கட்சி தலைவர் சைமன் இன்று அளித்த ஒரு பேட்டியில் திமுகவை வெளுத்து வாங்கிவிட்டார். அதை தவறு என சொல்லியும் சீமான் மன்னிப்பு கேள் என்றும் காலையிலிருந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

அதை தவிடுபொடியாக்கும் வகையில் நண்பர்களுக்கு பிறகு களத்தில் இறங்கிய தம்பிகள் சீமான் சொல்வது சரிதான் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அது 50k தாண்டி போய்க்கொண்டே இருக்கிறது. செபாஸ்டியன் சீமான் தனது பேட்டியில் “100 நாள் வேலைத்திட்டத்தை ரத்து பண்ணுங்க. அதனால விவசாயத்துக்கு ஆளே கிடைக்கமாட்றாங்க.

விவசாயத்துக்கு ஆளே கிடைக்காதப்ப எதுக்கு விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடுறீங்க. விவசாயத்த மேம்படுத்த நினைச்சா 100 நாள் வேலைத்திட்டத்துக்கு கொடுக்கற பணத்தை ஊக்கத்தொகையா கொடுங்க. விவசாயம் பண்ண ஆளுங்க வருவாங்க.” என தெரிவித்துள்ளார்.

`

இவரின் கருத்தை ஏற்றுக்கொண்டு சீமான் சொல்வது சரிதான் என தம்பிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் IT விங் சிறப்பாக செயல்படும் அரசியல் கட்சி நாம்தமிழர் ஒன்றுதான் என தம்பிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

```
```

…உங்கள் பீமா

#ntk #seeman