திமுக ஆட்சிக்கு வந்தபின் பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திட்டங்கள் எல்லாவற்றையும் திமுகாவே புதியதாக அமல்படுத்துவது போல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.
மத்திய பிஜேபி அரசின் ஜல் தல் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு திட்டத்தை தாங்களே செய்தது போல கலைஞர் மற்றும் முக ஸ்டாலின் படத்தை போட்டு விளம்பரம் செய்கின்றனர் என பிஜேபியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ” தீண்டாமை ஒழிக்கும் சமூக நீதி பேணும் கிராமங்களுக்கு 10 லட்சம் ரொக்கப்பரிசு” என அறிவித்திருக்கிறார்.
https://www.vikatan.com/government-and-politics/politics/10131-
ஆனால் 2012 லேயே மறைந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த சமூக நீதி தீண்டாமை ஒழிப்பு கிராமங்களுக்கான பரிசுத்தொகையை இரண்டு லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தியிருக்கிறார். மேலும் நாகப்பட்டினம் திருபயத்தங்குடி அருகில் உள்ள திருமருகால் கிராமம் இந்த 10 லட்சத்திற்கான பரிசை 25-செப்டம்பர் 2019 லேயே வாங்கியிருக்கிறது.
http://cms.newindianexpress.com/states/tamil-nadu/2019/sep/25/nagai-village-declared-untouchability-free-2038868.html
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் சமூக நீதியை கடைப்பிடித்ததற்க்காக 2020ல் விருதும் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டு, 2021 ல் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி ஆகஸ்ட் 15 அன்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெங்கடாபுரம் மற்றும் சின்னதாராபுரம்ஆகிய கிராமங்களுக்கு விருதை வழங்கினார்.
இப்படி முன்னரே இருந்த பல திட்டங்களை திமுக புது பெயர் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது என எதிர்கட்சிகள் ஆதாரத்தோடு விமர்சித்து வருகின்றனர்.
..உங்கள் பீமா