Tuesday, October 15, 2024
Home > அரசியல் > அண்ணா கொஞ்சம் கருணை காட்டுங்க..! கலாய்த்து தள்ளிய அண்ணாமலை கே..!!

அண்ணா கொஞ்சம் கருணை காட்டுங்க..! கலாய்த்து தள்ளிய அண்ணாமலை கே..!!

தற்போது தமிழக அரசியல் திமுகVS பிஜேபி என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக திமுக அரசின் தவறுகளை முன்பில்லாததை விட தமிழக பிஜேபி வலுவாக சுட்டிக்காட்டி தனது கண்டனங்களை பதிவிட்டுவருகிறது.

தமிழக ஊடகங்களுக்கு நேர்த்தியாகவும் அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்திலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கே அவர்கள் தெளிவாக எடுத்துரைக்கிறார். அதே நேரத்தில் பத்திரிக்கையாளர்களின் மாண்பை குலைக்காத விதத்திலும் அவர்களை மதித்தும் நடந்து வருகிறார். இது தமிழக அரசியலுக்கு புதிது.

இந்நிலையில் நியூஸ் 7 எனும் தொலைக்காட்சி ட்விட்டரில் முக ஸ்டாலின் ஆட்சி பற்றிய அண்ணாமலை அவர்களின் விமர்சனத்தை குறித்தது வாக்கெடுப்பு நடத்துகிறது. அதில் “முதல்வரின் செயல்பாடுகள் ஊடகங்களால் மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிறது என அண்ணாமலை கூறுவது, எதிர்க்கட்சி அரசியல், உண்மைக்கு புறம்பானது, ஊடகங்களுக்கு நெருக்கடி தர, சிறப்பாக செயல்படுவதால் ” என நான்கு ஆப்சனை கொடுத்திருக்கிறது.

`

இதில் எதை தேர்வு செய்தாலும் அது திமுகவுக்கு சாதகமாக பதில் இருக்குமாறு உள்நோக்கத்துடன் கேள்வியை எழுப்பியுள்ளது நியூஸ் 7. இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டரில் ” அண்ணா நியூஸ் 7 என்ன இது. கேள்விகள் சரி. ஆனால் ஒருதரப்பு கேள்விகளாகவே இருக்கிறதே. கொஞ்சம் கருணை காட்டுங்கள்” என நக்கலடித்து பதிவிட்டுள்ளார்.

```
```

…..உங்கள் பீமா

#annamalaik #tnbjp #news7