Friday, June 2, 2023
Home > செய்திகள் > பரிவு காட்டலாம் ஆனால் போராட அனுமதிக்க முடியாது..! டெல்லி கோர்ட் அதிரடி..!

பரிவு காட்டலாம் ஆனால் போராட அனுமதிக்க முடியாது..! டெல்லி கோர்ட் அதிரடி..!

ஆப்கனை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நாள் முதல் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். துருக்கி நாடு ஆஃப்கான் அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பங்களாதேஷ் பாகிஸ்தான் உட்பட அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஆப்கான் இஸ்லாமியர்களை புறந்தள்ளிவிட்டது.

ஆனால் இந்தியா பரிவோடு அவர்களை அரவணைக்கிறது. இருந்தாலும் இங்கு வாழும் ஆப்கான் அகதிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர குடியுரிமையும் வாழ்வாதாரமும் வேண்டும் என பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானியர்கள் போராட்டம் நடத்தும் டெல்லியின் வசந்தவிஹார் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். அங்கு நடக்கும் இவர்களது போராட்டத்தால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

அதையடுத்து வசந்தவிஹார் பகுதியினர் டெல்லி நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு வந்தது. இந்த வழக்கை விசாரித்த ரேஹா பல்லி ” அகதிகள் மேல் பரிவு காட்டலாம். ஆனால் போராட அனுமதிக்க முடியாது. உங்கள் போராட்டத்தால் டெல்லியை ஆபத்தில் தள்ள முடியாது.மாநில மத்திய அரசுகள் வரும் செவ்வாய்கிழமைக்குள் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்” என தீர்ப்பளித்தார்.

`

இதுகுறித்து பேசிய காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சத்யகாம் “அவர்களை வலுக்கட்டாயமாக அதிகாரத்தை பயன்படுத்தி அடித்து விரட்டியிருக்கலாம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் காவல்துறை அதை செய்யவில்லை. மேலும் கடந்த 23 ஆகஸ்டில் அமெரிக்க அகதிகள் ஏஜென்சி எதிரில் நூற்றுக்கணக்கானோர் கூடி அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் நடந்து கொண்டனர். அப்போதும் காவல்துறை அமைதி காத்தது.” என கூறினார்.

இதுகுறித்து பேசிய வசந்தவிஹார் குடியிருப்புவாசி ஒருவர் ” இஸ்லாமிய நாடுகளே கைவிட்ட நிலையில் இந்தியர்கள் நாங்கள் சகோதர பாசத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் இவர்கள் இங்கு வந்து தாலிபனுக்கு எதிராக போராடுகிறார்கள். அங்கேயே இருந்து போராடியிருக்கலாமே. இந்தியாவில் ஷரியா சட்டம் வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் அங்கு ஷரியா சட்டம் இயற்றப்பட்டால் இங்கு ஓடி வருகிறார்கள். இவர்களின் நோக்கம் தான் என்ன. இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாம். அனைத்தையும் எப்படி கொடுப்பது.” என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார்.

ஆப்கன் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதில் இன்னும் தெளிவில்லை என டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் கடந்த இரண்டுநாட்களாக கத்தாரை மீடியேட்டராக வைத்து தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…உங்கள் பீமா