Friday, March 24, 2023
Home > செய்திகள் > சிக்கிட்டியே குமாரு..!! வின்னர் வடிவேலு பாணியில் மாட்டிய வங்கி கொள்ளையர்கள்..! வெளியான வீடியோ..!

சிக்கிட்டியே குமாரு..!! வின்னர் வடிவேலு பாணியில் மாட்டிய வங்கி கொள்ளையர்கள்..! வெளியான வீடியோ..!

வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருட சென்று அங்கிருந்தவர்களை எழுப்பி கையும்களவுமாக மாட்டிக்கொள்வார். அதே போல ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் அஹமதுநகர் ஷெந்தியில் ஐஓபி வங்கிக்கிளை செயல்பட்டுவருகிறது.

நேற்று அங்கு விடுமுறை என்பதால் அதை தெரிந்துகொண்ட திருடர்கள் வங்கியில் நுழைந்து திருட முற்பட்டனர். அங்கிருந்த செக்யூரிட்டி சிஸ்டம் அலாரம் சமிஞை அனுப்ப காவல்துறையினர் உஷாராகி உடனடியாக விரைந்து வந்தனர்.

பூட்டுகள் உடைக்கப்பட்டு வங்கியின் கதவுகள் மூடப்பட்டிருந்தது. உள்ளே ஆள் நடமாட்டத்தை உணர்ந்த போலீசார் அமைதியாக காத்திருந்தனர். ஷட்டரின் பின்புறம் நடமாட்டத்தை கவனித்த போலீஸ் ஒருவர் மெதுவாக ஷட்டரை திறக்க திருடர்கள் தடதடவென வெளியே ஓடிவந்தனர்.

`

முன்னரே தயாராக இருந்த காவல்துறை அனைவரையும் கொத்தாக அமுக்கியது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த அந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குளாகியது. போலீசார் திருடர்களை பிடிக்கும் காட்சியை அங்கிருந்த பலர் தங்களது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

.