Saturday, July 27, 2024
Home > அரசியல் > விடியல் அரசா… வீடியோ அரசா..? அனல் பறந்த டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு…!

விடியல் அரசா… வீடியோ அரசா..? அனல் பறந்த டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு…!

10-12-21/6.27am

திருச்சி : திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் உட்பட ஏழு மாவட்டங்களுக்கான புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர்களிடம் “ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. இரண்டு வருடம் முழுமையாக முடிந்த பின்னரே ஆட்சின் நிர்வாகத்தன்மை பற்றி தெரியவரும். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. பெண்களுக்கு 1000 ரூபாய் மாதந்தோறும் வழங்குவதாக அறிவித்த திமுக அதைப்பற்றி தற்போது வாய் திறக்க மறுக்கிறது. இந்திய மாநிலங்களிலேயே பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என கூக்குரலிட்ட திமுக தற்போது அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

`

சாத்தான்குளம் ஜெயராஜ் பெலிக்ஸ் மரணத்தில் சட்டம் கட்டுப்பாட்டில் இல்லை காவல்துறை அராஜகம் என பேசிய திமுக தற்போது மாணவர் மணிகண்டன் சந்தேகத்துக்குரிய மரணத்தில் கருத்து சொல்ல மறுக்கிறது. இதுபோன்று தொடர் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் ஒரு காவலரை 10 வயது சிறுவன் கொன்றுவிட்டான் என காதில் பூச்சுற்றுகிறார்கள்.

```
```

அந்த வழக்கை விசாரணை செய்யாமல் பூசி மெழுகி மூடி மறைத்து விட்டார்கள். எனவே இந்த திமுக அரசு பெரிய சாதனை செய்ததாக எந்த இடத்திலும் சொல்ல முடியாது. விடியல் அரசாக இருந்தால் பரவாயில்லை. இது வீடியோ அரசாக இருக்கிறது. விடியா அரசாக இருக்கிறது. தினமும் வீடியோ மட்டும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. செயல்பாடுகள் எதுவும் திருப்திகரமாக இல்லை.” என குறிப்பிட்டார்.

….உங்கள் பீமா