15-3-22/10.49am
கர்நாடகா : பல தாசாப்தங்களாக இல்லாத நடைமுறையாக திடீரென கர்நாடகா உடுப்பியில் உள்ள அரசுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரியில் சில பெண்கள் ஹிஜாப் அணிந்துவந்து பிரச்சினைக்கு அடிகோலிட்டனர். அதைத்தொடர்ந்து நாடுமுழுவதும் போராட்டமாக பரவியது.

இந்த ஹிஜாப் பிரச்சினையில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மூளையாக செயல்பட்டு மாநிலமெங்கும் போராட்டமாக முன்னெடுத்தது. ஹிஜாபுக்கு எதிராக கருது சொன்னவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பலர் கடும் தாக்குதலுக்கு ஆளாயினர். எதிர்க்கட்சிகள் இந்த சீருடை பிரச்சினையை அரசியலாக்கின. கர்நாடக அரசு சீருடை விஷயத்தில் தனது நிலைப்பாட்டில் மாறாமல் இருந்தது. பள்ளிக்கல்வித்துறையும் சீருடைவிஷயத்தில் கொள்கை மாறாமல் இருந்தது.

இந்தவழக்கை அவசரமாக விசாரிக்க சொல்லி ஆறுமாணவிகள் தரப்பில் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றம் அதை மறுத்துவிட்டது. மேலும் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முதலில் நடத்தினார். பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் உருவாக்கப்பட்டது. தற்போது நீதியரசர் ரிதுராஜ் அஸ்வதி தலைமையிலான பென்ச் அளித்த தீர்ப்பில் ” ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கமல்ல. அரசின் ஆணைக்கு சட்டம் இணங்குகிறது. சீருடை விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை. அரசின் ஆடைக்கட்டுப்பாடு குறித்து எந்த கேள்வியும் இல்லை. மாநில கல்லூரிகள் ஹிஜாபிற்கு விதித்த தடை தொடரும்” என அறிவித்துள்ளது.

மேலும் இந்த சூழல் காரணமாக வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளி கல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது. பதட்டமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அஸ்வதி அவர்களின் இல்லம் அமைந்துள்ள அரண்மனை சாலை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதுடன் பலத்த காவல் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா
