15-1-22/18..pm
உத்திரபிரதேசம் : மத்திய பிஜேபி தேர்தல் தேர்வுக்குழு அமைப்பு உத்திரபிரதேச வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் இருந்து போட்டியிடலாம் என்ற யூகங்கள் நிலவி வந்த நிலையில் ஆறுமுறை தொடர்ந்து எம்பியாக இருந்த கோரக்பூர் தொகுதி யோகிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று 107 வேட்பாளர்கள் பட்டியலை பிஜேபி மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. அதில் 83 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களில் 20 பேருக்கு மாரு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பேஸ் 1 ல் உள்ள 58 சீட்டுக்களில் 57 வேட்பாளர் பெயர்களையும் 55 சீட்டுக்கள் உள்ளடக்கிய பேஸ் 2ல் 48 வேட்பாளர்கள் பெயர்பட்டியலையும் வெளியிட்டுள்ளார். கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் 403ல் 303 பிஜேபி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்தமாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதிகளான நோயடா தாத்ரி மற்றும் ஜீவர் முக்கியமான தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. நொய்டாவில் 6,90,231 வாக்காளர்களும் தாத்ரியில் 5,86,559 வாக்காளர்களும் ஜீவரில் 3,46,425 வாக்காளர்களும் உள்ளனர்.
நொய்டாவில் பங்கஜ் சிங் வேட்பாளராகவும் தாத்ரியில் தேஜ்பால் சிங்கும் ஜேவாரில் திரேந்திர சிங்கும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரும் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது கூடுதல் சிறப்பு. அடுத்தடுத்த ஆருக்கு மேற்பட்டோர் பிஜேபியிலிருந்து விலகி சென்றாலும் பிஜேபியின் வாக்கு சதவிகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்கப்போவதில்லை என கருத்து கணிப்புகள் எடுத்துரைக்கின்றன.
…..உங்கள் பீமா