Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > ஹிஜாப் வழக்கு தீர்ப்பு வீடியோ உங்கள் பார்வைக்கு..!

ஹிஜாப் வழக்கு தீர்ப்பு வீடியோ உங்கள் பார்வைக்கு..!

15-3-22/14.00pm

கர்நாடகா : ஹிஜாப் சர்ச்சை டிசம்பர் 31 அன்று உடுப்பி மாவட்டத்தில் உள்ள பி யூ பெண்கள் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவிகளால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கேம்பஸ் பிரண்ட் இந்தியா எனும் அமைப்பு இதை பூதாகரமாக மாற்றியது.

ஜனவரி 1 அன்று பெற்றோர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஒருமனதாக மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்ட சீருடையை அணியவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஜனவரி 6 பொம்பெய் கல்லூரியில் பல மாணவர்கள் காவி துண்டுகள் அணிந்துவந்தனர். ஜனவரி 13 அன்று உடுப்பி கல்லூரியில் பயிலும் எட்டு மாணவிகள் வகுப்பை புறக்கணித்தனர்.

ஜனவரி 19 அன்று மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டது. ஆனால் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது அகற்றவேண்டும் என கூறப்பட்டது. ஜனவரி 25 அன்று கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. ஜனவரி 31 அன்று உடுப்பி கல்லூரி மாணவிகள் நீதிமன்றத்தை நாடினர்.
பிப்ரவரி மாதம் இந்த சர்ச்சை உச்சத்தை தொட்டது.

`

பிப்ரவரி 8 அன்று மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதையடுத்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. பிப்ரவரி 9 அன்று இந்த வழக்கை விசாரிக்க தனி பெஞ்ச் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 10 அன்று கர்நாடக உயர்நீதிமன்றத்திலிருந்து வழக்கை மாற்றகோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிப்ரவரி 23 அன்று இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. அதில் சீருடையை கல்விநிறுவனமே பரிந்துரைக்கும் எனவும் அதுவரை ஹிஜாப் அணிய தடையும் விதித்தது. இன்று மார்ச் 15 ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு ஹிஜாப் இஸ்லாமின் இன்றியமையாத பாகம் அல்ல என குறிப்பிட்டது.

```
```

update on : 14.34pm

சென்னையில் ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் நியூ கல்லூரியில் போராட்டம்

இந்த வழக்கின் தீர்ப்பை மெஹபூபா முப்தி அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர். பல நடுநிலையாளர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். இந்த தீர்ப்பு காலை 10 மணிக்கு வாசிக்கப்பட்டது. ஆனால் சுறாப்புரா பெண்கள் கல்லூரியில் 35 மாணவிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து தேர்வை புறக்கணித்து சென்றுள்ளனர்.

இந்த தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் ஒருமணிவரை என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு 10 மணிக்கு மேல் வெளியான பட்சத்தில் இதற்காகவே காத்திருந்தது போல பத்துமணி தேர்விற்கு செல்லாமல் மாணவிகள் காத்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

……உங்கள் பீமா