Saturday, July 27, 2024
Home > செய்திகள் > இளையான்குடியில் தொடர் பதட்டம்..! பள்ளி மாணவி தற்கொலை..! ஆசிரியர் சம்சுதீனை காப்பாற்றுகிறதா ஜமாத்..!

இளையான்குடியில் தொடர் பதட்டம்..! பள்ளி மாணவி தற்கொலை..! ஆசிரியர் சம்சுதீனை காப்பாற்றுகிறதா ஜமாத்..!

16-11-21/ 18.40PM

இளையான்குடி : இளையான்குடி திருவலூர் கிராமத்தில் உள்ள ஜமாத்துக்கு சொந்தமான பள்ளியில் 18 வயது மாணவி தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த இருநாட்களுக்கு முன் 18 வயது மாணவி ஒருவர் ஆசிரியர் துன்புறுத்தியதால் எலிமருந்து அருந்தி உயிர்விட்டார். திருவலூர் கிராமத்தில் அமைந்துள்ளது மேல பள்ளிவாசல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. இது அரசு உதவி பெறும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பயின்று வந்த மாணவி கவிதா என்பவரை அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சம்சுதீன் என்பவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

`

குற்றம் சாட்டப்பட்ட சம்சுதீன் மீது வழக்கு பதியவில்லை என தெரிகிறது. இதையறிந்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” காவல்துறை மற்றும் இளையான்குடியில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாமே இந்த பெற்றோருக்கு ஆதரவாக நிற்கவில்லை.

அதற்க்கு மாறாக அந்த பகுதிகளில் இருக்க கூடிய இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத்தின் நிர்பந்தத்திற்கு பணிந்து இது மத ரீதியான பிரச்சினையாக வந்துவிட கூடாது என்பதற்க்காக காவல்துறையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் ஜமாத் பள்ளி மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

```
```

அந்த FIR அப்படியே இருக்கிறது. அதன் மீதான மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. காவல்துறை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பிஜேபி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அவர்களே கிழித்து எறிகிறார்கள்.

சம்பந்தப்பட்ட பள்ளி மீதும் ஆசிரியர் சம்சுதீன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இதே போல ஒரு சம்பவம் கேளம்பாக்கம் அருகே உள்ள பள்ளியில் நடந்த போது தமிழ்நாடு முழுக்க சென்றடையும் வகையில் செய்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இந்த அப்பாவி கவிதா இறப்பின் பின்னால் ஜமாத் இருப்பதால் ஊடகங்கள் செய்தியை வெளியிட தயங்குகின்றன என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.

…..உங்கள் பீமா