Monday, February 10, 2025
Home > செய்திகள் > புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் மீது போக்சோ சட்டம் பாய்கிறதா..!??

புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் மீது போக்சோ சட்டம் பாய்கிறதா..!??

17-11-21/ 10.21am

கோவை: இறந்த மாணவியின் அடையாளங்களை வெளியிட்ட யூட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கைகள் பாய்கிறது. புதியதலைமுறை கார்த்திகை செல்வனும் அடையாளத்தை வெளியிட்டிருப்பதால் அவர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கோவையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியை சேர்ந்த சிலரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அந்த மாணவி சிலரது பெயரை குறிப்பிட்டதோடு அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவத்தை ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலையில் வலதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் கோயம்புத்தூர் மக்கள் என இணையத்தில் பதிவிட்டு தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தன. அதையடுத்து அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட ஆரம்பித்தன.

`

அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட ஜோதிமணி திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று மாலை கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் மாணவியின் அடையாளங்களை வெளியிட்ட 48 யுடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புதிய தலைமுறை சேனலை சேர்ந்த கார்த்திகை செல்வன் இறந்த பெண்ணின் பெயரை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதனால் இவர் மீது போக்ஸோ வழக்கு பாயுமா சட்டம் தனது கடமையை செய்யுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

```
```

…….உங்கள் பீமா