Monday, December 2, 2024
Home > செய்திகள் > மீண்டும் அட்டூழியம்..! இஸ்லாமியரின் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..!

மீண்டும் அட்டூழியம்..! இஸ்லாமியரின் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..!

25-11-21/10.36am

தென்காசி : கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்காசி பகுதி திமுக எம்பி தனுஷ் குமார் விவசாயி ஒருவரின் நிலத்தை ஆக்கிரமித்ததால் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் கண்முன்னே தீக்குளிக்க முயன்றார். அந்த சம்பவம் நடந்த தடம் மறைவதற்குள் திமுகவினரின் அடுத்த அட்டூழியம் தொடங்கியுள்ளது.

திமுக அமைச்சர்கள் முதல் அடிமட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தொண்டர்கள் என பலர் மீது நில அபகரிப்பு புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த தமிழகம் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் போர்க்களமாக மாறிவிட்டது என குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரின் நிலத்தை திமுக செயலாளர் ஒருவர் ஆக்கிரமித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றி பாதிக்கப்பட்ட இஸ்லாமியர் ஒருவர் தொலைக்காட்சி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ” தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை நிலத்தை ஆக்கிரமித்துவிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.

`

கடந்த சில வருடங்களாக எனது தந்தையிடம் நிலத்தை எனக்கு விற்றுவிடு என தொடர்ந்து குடைச்சலை கொடுத்தார். கடந்த வருடம் எனது தந்தையை மிரட்டியதால் அவரது இதயம் பலவீனமாகி இறந்துவிட்டார். அவர் இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. இப்போது செல்லத்துரை எங்களது நிலத்தில் பைப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

```
```

இது தொடர்பாக கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். மேலும் போலியான பத்திரம் ஒன்றையும் தயார் செய்துள்ளார். அதை காண்பித்து இதுதான் உண்மையான பத்திரம் என பொய் கூறுகிறார். அனைத்து ஆதாரங்கள் ஆவணங்களுடன் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.” என கண்ணீர்மல்க கூறினார்.

…..உங்கள் பீமா