Saturday, October 5, 2024
Home > செய்திகள் > மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..! இன்பநிதி ஸ்டாலின் பின்னால் செல்லும் ஊடகங்கள்..!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..! இன்பநிதி ஸ்டாலின் பின்னால் செல்லும் ஊடகங்கள்..!

இன்று வேலூர் தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். இப்படி தினம் தினம் மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்துவருகிறது.

ஊடகங்களோ முக ஸ்டாலினின் பேரனான இன்பநிதி கால்பந்து போட்டிக்காக வெளிநாடு செல்வதை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கின்றன. அதிலும் ஒரு பத்திரிக்கையாளர் கால்பந்து வீரரான மெஸ்ஸியின் இடத்தை நிரப்பவந்த இன்பநிதி என ட்வீட் செய்துள்ளார். மேலும் ஒரு பத்திரிக்கை இன்பநிதி ஜெர்மன் கால்பந்து அணிக்கு விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என புகழ்ந்து தள்ளியிருக்கிறது.

`

இங்கு மாணவர்கள் பயத்தில் உயிரை தொலைத்துக்கொண்டிருக்க ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மாணவ மாணவியரை புறந்தள்ளிக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“NEET -க்கு மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த T.சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து, பெற்றோராக எனது மன வருத்தத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

நான், 14.09.2021 அன்று வெளியிட்ட, அறிக்கையின்படி, உடனே ஆசிரியர், உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குங்கள் என்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். மாணவச் செல்வங்களே, விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்காதீர்கள் என்று உங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

```
```

மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள். நான் நேற்றே கூறியதுபோல், மருத்துவர் தான் ஆக வேண்டும் என்று இல்லை.42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளன. மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான். அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு. அவன் நேர்மையின் மறு பிறப்பு என்ற பாடல் வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன்.

மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவ படிப்புக்கு இணையான சில படிப்புகளை அட்டவணையிட்டுள்ளார்.

…உங்கள் பீமா