Thursday, March 28, 2024
Home > செய்திகள் > கதறும் பட்டாசு தொழிலாளர்கள்..! தீபாவளி பட்டாசு வெடிக்க தடை அறிவித்த முதல்வர்…!

கதறும் பட்டாசு தொழிலாளர்கள்..! தீபாவளி பட்டாசு வெடிக்க தடை அறிவித்த முதல்வர்…!

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் அதையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் பட்டாசு தொழிற்சாலை ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

பால் பாயிண்ட் பேனா வரவால் விருதுநகர் மாவட்டத்தில் பேனா நிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. அதையடுத்து சீன இயந்திரங்களின் வரவால் தீப்பெட்டி தொழிலாளர்களின் வேலை பறிபோனது. அதோடு நில்லாமல் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த பெரிய தொழிலான பட்டாசு உற்பத்தியும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் என கூறிக்கொள்ளும் சில அமைப்புகளால் நலிவடைந்து வருகிறது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு புது துணி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் மக்கள் தங்கள் பண்டிகை கால மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதனால் பட்டாசு உற்பத்தி அமோகமாக நடைபெறும். பட்டாசு விற்பனை அதையே வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்தது.

`

இந்நிலையில் சில அமைப்புகளின் செயலால் பட்டாசு உற்பத்தி நலிவடைந்து போனது. பட்டாசு வெடிக்க சில மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தன. இது இப்படி இருக்க இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி “பட்டாசு வெடிப்பதோ அதை விற்பனை செய்வதோ அல்லது பதுக்குவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் தீபாவளி பண்டிகையொட்டி காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக பட்டாசு வெடிக்க விற்பனை செய்ய மற்றும் பதுக்கி வைக்க தடை விதிக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

```
```

“ஏற்கனவே சீன பட்டாசுகள் வரவால் நிலைகுலைந்து போயிருக்கும் பட்டாசு தொழில் மேலும் மோசமாகிவிடும். பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நெறிமுறைகளை அறிவிக்கலாம். முழுவதும் தடை என்பது எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகிவிடும்” என பட்டாசு தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா