Tuesday, June 2, 2026
Home > செய்திகள் > இதுதாண்டா போலீஸ்..! ரவுடிக்கு கட்டம் கட்டிய காவல்துறை..!

இதுதாண்டா போலீஸ்..! ரவுடிக்கு கட்டம் கட்டிய காவல்துறை..!

16-3-22/15.32pm

நாங்குநேரி : நாங்குநேரி களக்காடு செல்லும் வழியில் காட்டுக்குள் ஆய்தங்களுடன் பதுங்கியிருந்த ரவுடியை திண்டுக்கல் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை ஒட்டியுள்ள நீராவிப்பேட்டையை சேர்ந்தவர் நீராவி முருகன். இவர் மீது சென்னை,தூத்துக்குடி ஈரோடு உள்ளிட்ட பலமாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் ஆள்கடத்தல்,கொலைமுயற்சி. கொலை, திருட்டு வழிப்பறி உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனைபோலீசார் வலைவீசி தேடிவந்தனர். 2019ல் ஜாமீனில் வெளிவந்தவன் தலைமறைவானான்.

அவரை கைதுசெய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் முயன்றுவந்தனர்.இவரை கடந்த பலமாதங்களாக போலீசார் தேடிவந்த நிலையில் களக்காடு மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து நாங்குநேரி களக்காடு சாலையில் சுப்ரமணியபுரம் கிராமம் அருகே உள்ள பொத்தையில் பதுங்கியிருந்த அவனை சப் இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை சுற்றிவளைத்தது.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ் ஒருவரை வெட்டியுள்ளான். அதை தடுக்க முயன்ற இரண்டு போலீஸ்காரர்களும் வெட்டு விழுந்தது. இதனால் தங்களை தற்காத்துக்கொள்ள போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானான். தகவலறிந்த நெல்லை டி.ஐ.ஜி பிரவேஷ் அங்குவிரைந்து சென்றனர். பாதிக்கப்பட்ட காவலர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…உங்கள் பீமா