Monday, December 2, 2024
Home > செய்திகள் > வாரம் ஒரு வழிபாட்டு தலத்தை இடித்து தள்ளுங்கள்..! தலைமை செயலாளர் சுற்றறிக்கை..!

வாரம் ஒரு வழிபாட்டு தலத்தை இடித்து தள்ளுங்கள்..! தலைமை செயலாளர் சுற்றறிக்கை..!

தமிழகத்தில் கோவில்கள் பல்வேறு காரணங்களை காட்டி இடித்து தள்ளப்பட்டது போல கர்நாடகா மைசூரிலும் ஒரு பழமையான கோவில் இடித்து தள்ளப்பட்டது. மைசூரு நஞ்சங்குடு பகுதியில் அமைந்துள்ளது பழமையான சிவஸ்தலம் .

அந்த கோவிலை மைசூரு மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது. இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தெரிவிக்கையில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை நீதிமன்றம் இடிக்க ஆணையிட்டது. அதையே நிறைவேற்றினோம் என தெரிவித்தது.

இந்நிலையில் கர்நாடக மாநில தலைமை செயலாளர் கடந்த ஜூலை மாதம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “29-9-2009 ல் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களை வாரத்திற்கு ஒன்றாக இடிக்கவேண்டும். இதை ஒவ்வொரு ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும்”. என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`

கோவில் இடிக்கப்பட்ட விவகாரம் குறித்து சித்தராமையா ” மைசூரு மாநகராட்சி பழமையான கோவிலை இடித்து மக்களின் நம்பிக்கையை காயப்படுத்தியிருக்கிறது.” குறிப்பிட்டார். மேலும் மக்கள் வலுவாக கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். “700 வருட பழமையான கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டதா, இன்னும் பல கோவில்களை மாவட்ட நிர்வாகங்கள் இடிக்கப்போவதாக சொல்கிறார்கள். அப்படி நடந்தால் மாநிலம் முழுதும் போராட்டம் தீவிரமாக நடக்கும்” என தெரிவித்தனர்.

```
```

அதையடுத்து இன்று கர்நாடக முதல்வர் பொம்மை வெளியிட்ட அறிக்கையில் “இனி எந்த நகராட்சி நிர்வாகமும் அரசின் அனுமதியின்றி கோவிலை இடிக்க கூடாது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை படித்து சாதக பாதகங்களை சட்டவல்லுநர்களை கொண்டு ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.

…உங்கள் பீமா