Thursday, March 28, 2024
Home > செய்திகள் > உயிருடன் இருக்கும் வீராங்கனையை இறந்துவிட்டார் என போலியாக செய்தி வெளியிட்ட தேசிய ஊடகங்கள்..!

உயிருடன் இருக்கும் வீராங்கனையை இறந்துவிட்டார் என போலியாக செய்தி வெளியிட்ட தேசிய ஊடகங்கள்..!

11-11-21/ 12.30pm

இந்தியா சார்பில் செர்பியாவில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றிருந்த வீராங்கனை நிஷா தாஹியா. இவர் இறந்துவிட்டார் என போலியாக செய்தி வெளியிட்டுள்ளன தேசிய ஊடகங்கள்.

நேற்று முன்தினம் ஹரியானா மாநிலத்தில் சுஷில் குமார் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி முடித்து திரும்புகையில் நிஷாவும் அவரது சகோதரரும் சுடப்பட்டு இறந்துவிட்டதாக தி இந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் எகனாமிக் டைம்ஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.

ஆனால் நேற்று நிஷா தாஹியா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் “நான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக கோண்டா நகருக்கு வந்துள்ளேன். நான் கொல்லப்பட்டதாக வரும் செய்தி போலியானது” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை இந்தியா மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

`

https://www.instagram.com/p/CWGNBcnJ4iA/?utm_source=ig_web_copy_link

```
```

தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்கள் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்வதாக பலர் குற்றசாட்டை முன்வைக்கையில் தற்போது இந்த சம்பவம் ஊடகங்களின் மேல் உள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா