Friday, March 24, 2023
Home > செய்திகள் > நான் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை…! சூர்யா திருமாவளவன் இருவரையும் வெளுத்துவிட்ட காயத்ரி ரகுராம்…!

நான் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை…! சூர்யா திருமாவளவன் இருவரையும் வெளுத்துவிட்ட காயத்ரி ரகுராம்…!

16-11-21/ 6.15am

சென்னை : ஜெய்பீம் திரைப்படம் சூர்யாவின் இன்னொரு முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. நேற்று சூர்யா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் திருமாவளவனை பாராட்டியிருந்தார். அதற்க்கு காயத்ரி ரகுராம் தனது பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

உண்மை சம்பவங்களை படமெடுக்கிறேன் என கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அனுமதி இல்லாமல் அவர்களை வைத்து பணம் ஈட்டியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை இருளர் எனவும் மாற்றி கூறியதோடு தனது கடந்த படமான சூரரை போற்று போல முக்கியமான கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மையை போலியாக மாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த பெண் தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் “அது போல் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஏன் இத்தனை ஆண்டுகளாக பார்வதி அம்மாவின் குடும்பத்திற்கு எதுவும் செய்யவில்லை? தயவு செய்து கேட்டு சொல்லுங்கள். பழங்குடியினக் குடும்பத்திற்கு படத்தைப் பாராட்டினால் மட்டும் போதுமா? அவர் சமூக நீதிப் போராளியா?

`

நான் மக்களுக்கு என்ன செய்கிறேன் என்று ஒவ்வொருவரும் என்னிடம் கேட்டபோது. நான் எம்.பி, எம்.எல்.ஏ அல்ல, உங்களைப் போல் நான் சம்பாதிக்கவில்லை. நான் குறைவாக சம்பாதிக்கிறேன் என்று சொல்ல வெட்கப்படவில்லை. என்னால் முடிந்ததை மட்டுமே மக்களுக்கு செய்ய முடியும். நான் மற்றவர்களிடமிருந்து நிதிபெறவில்லை நான் அறங்காவலர் அல்ல அல்லது நான் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை. நான் ஒரு சாதாரண பெண் கடினமான காலங்களில் மற்றவர்களுக்கு உதவுபவர்.

.அவர் இதுவரை பழங்குடி மக்களுக்கு என்ன செய்தார்? அவர்கள் வாழ்வில் ஏன் முன்னேற்றம் இல்லை? கேட்டு சொல்லுங்க.. 30 வருடங்களாக அரசியலில் இருக்கிறார்.. சிறந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவை நீங்களா அல்லது திருமா வாழ்த்தினீர்களா?” என திருமாவளவனையும் சூர்யாவையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

……உங்கள் பீமா