12-12-21/11.54am
சென்னை : கல்யாணராமன் எழுத்தாளர் மாரிதாஸ் மற்றும் ஷிபின் போன்ற பாஜகவினரை அடுத்தடுத்து திமுக அரசு கைது செய்து வருவதையொட்டி கமலாலயத்தில் இன்று தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மற்றும் சி.டி. நிர்மல் குமார் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் தமிழக திமுக அரசுக்கெதிரான அறவழிப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் பேசிய நிர்மல் குமார், ” மாரிதாஸ் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்த பொது அதைப்பற்றி அவதூறாக பேசிய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டாரா. அல்லது தொடர்ந்து பிரதமரை ஆபாசமாக பேசி வரும் திமுகவினர் கைது செய்யப்பட்டார்களா. பிரிவினை பேசும் திமுகவினர் கைது செய்யப்படாதபோது அவசரம் அவசரமாக மாரிதாஸை கைது செய்தது ஏன்.
மாரிதாஸ் மீது குண்டாஸ் போட திமுக அரசு தீவிரமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டங்கள் தொடரும்” என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் இணையத்தில் தமிழக நெட்டிசன்கள் TN_ GOONDAS_RULE என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றிருக்கிறது.

…..உங்கள் பீமா