12-12-21/ 14.39pm
தமிழகம் : தமிழகத்தில் அவ்வப்போது அரசு வெளியிட்டதாக பல யூகங்களும் தவறான தகவல்களும் சுற்றி வருவது வழக்கம். சமீபத்தில் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பற்றிய தவறான வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. அதே போல ஆளும் அரசுக்கு எதிரான மனா நிலையில் இருப்பவர்கள் அந்த அரசை அவமதிக்கும் பொருட்டு பல வதந்திகளை கிளப்புவதுண்டு.
அதே போல தற்போது மத்திய மோடி அரசு அறிவித்ததாய் ஒரு பொய்யான செய்தி ஒன்று உலா வருகிறது. அதில் * ரூ 1 / (ஒரு ரூபாய் மட்டுமே) * என தலைப்பிட்டு “இந்திய ராணுவத்தின் போரில் உயிரிழந்தோர் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு தொடங்கியுள்ளது. இராணுவ நலன்புரி கணக்கிற்கு நேரடியாக பணத்தை நன்கொடையாக வழங்கும் வங்கிக் கணக்கை அரசாங்கம் திறந்தது. இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கவும், போரில் உயிரிழந்தவர்களுக்கு வசதிகள் செய்யவும் இது பயன்படுகிறது.
மோடி அரசு இந்த ஆலோசனையை ஏற்று கனரா வங்கி, புதுதில்லியில் கணக்கு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், மக்கள் மிகச் சிறிய தொகையை நன்கொடையாக வழங்க முடியும். 135 கோடி மக்கள்தொகையில் 100 கோடி பேர் மோடி அரசாங்கத்தால் மாஸ்டர் ஸ்ட்ரோக், அமைச்சகம் ஒரு நாளைக்கு ரூ 100 கோடி, மாதம் ரூ 3000 கோடிகள், ஆண்டுக்கு ரூ 36000 கோடிகள்.
பாகிஸ்தானின் மொத்த பாதுகாப்புச் செலவு ரூ.36,000 கோடிக்கு மேல்.
தேவையில்லாத செலவுகளுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறோம், ஆனால் ராணுவத்திற்கு ஒரு ரூபாய் செலவழித்தால் நிச்சயம் இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும். இராணுவ இலாபங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பணம் நேரடியாக பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் செல்லும்.
போர்க்களத்தில் உயிர் இழந்த நமது துருப்புக்களுக்கு உதவ இது மிகவும் தனித்துவமான யோசனையாகும்.
நமது பாதுகாப்புப் படைகள், PARA ராணுவப் படை மற்றும் CRPF ஆகியவற்றுடன் ஒற்றுமையாக ஒற்றுமையைக் காட்டுவோம்.
வங்கி விவரங்கள்:
CANARA BANK
A/C NAME ARMY WELFARE FUND BATTLE CASUALTIES
A/C NUMBER : 90552010165915
IFSC CODE : CNRB0019055
SOUTH EXTENSION BRANCH,NEW DELHI.
==
அதிகபட்ச உறுப்பினர்களுக்கு ஒளிபரப்பவும்.
Jai Hind.
Jai jawan….” என தகவல்கள் அதிகமாக பகிரப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் இதை நம்பும் வகையில் மோடியின் பெயரையும் இந்திய ராணுவத்தின் பெயரையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது போன்ற வதந்தி வலைகளில் பொதுமக்கள் சிக்க வேண்டாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.
நீங்கள் இந்திய ராணுவத்திற்கு நன்கொடை அளித்து உங்கள் பங்கை செலுத்த வேண்டுமா கீழே இரு அதிகாரபூர்வ பக்கங்களை உங்களுக்காக இணைத்திருக்கிறோம். அதில் உங்கள் விலைமதிப்பற்ற பங்கை செலுத்துங்கள்.
https://www.bharatkeveer.gov.in
….உங்கள் பீமா