12-12-21/10.49am
இந்தியா : முப்படை தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத் இறுதி சடங்கு ஒளிபரப்பில் குடிபோதையில் அவரது பெயரை மாற்றிக்கூறி மேலும் பேசும்போது தடுமாறிய தேசிய ஊடகவியலாளர் ஒருவரின் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
நியூஸ் நேஷன் என்ற தேசிய ஊடகத்தை சேர்ந்த தீபக் சௌராசியா முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் ஒளிபரப்பின் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேரலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது மறைந்த முப்படை தளபதியை பத்திரிக்கையாளர் என வர்ணித்தார். ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் அந்த வாக்கியத்தை முடிக்க மிகவும் சிரமப்பட்டார்.
இதோடு நில்லாமல் ஜெனரல் ராவத் என குறிப்பிட மறந்து விபி சிங் எனவும் கூறினார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. “தி இந்து, பிபிசி மற்றும் இன்ன பிற பத்திரிகைகள் மற்றும் ராஜசரதீப் தேசாய் பர்கா தத் போன்ற தேசத்துக்கு எதிரான கருத்துக்களை முன்மொழியும் ஊடக மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது போன்ற தேசத்தை கொச்சைப்படுத்தும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவில் அவர் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அருந்திய மதுவின் போதை மறுநாள் வரை தொடர்ந்திருக்கும்” என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கூட பல பெரிய செய்தி நிறுவனங்கள் உள்நோக்கத்தோடு செய்திகளை திரித்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா