18-12-21/10.32
தாம்பரம் : சென்னை தாம்பரத்தை அடுத்து உள்ள முடிச்சூரில் புகழ்பெற்ற நரசிம்ம ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் தனியாருக்கு சொந்தமானதாகும்.
இந்த கோவில் அருகே சிறிய நீர்ப்படுகை ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் சாலையிலிருந்து உள்ளே 100 அடி தள்ளியே கட்டப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்திற்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாவண்ணம் அமைந்திருப்பது இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. ஆனால் நீர்ப்படுகை அருகில் உள்ளதால் இடைஞ்சலாக இருப்பதாக கூறி கோவில் தகர்க்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நீர்படுகையில் இருந்து கால் கிலோமீட்டர் தூரம் அமைந்திருக்கும் இந்த கோவில் யார் கண்ணுக்கு உறுத்தியது என்பது அந்த நரசிம்மனுக்கே வெளிச்சம். ஆனால் அந்த நீர்ப்படுகையை ஒட்டி இரண்டடி தூரத்தில் பல குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு கட்டிடடம் அந்த ஓடையின் பாதையை ஆக்கிரமித்தே எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த கோவிலை பிடிப்பதாக நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது பொதுப்பணித்துறை. இன்று காலையே பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கோவிலை இடிக்க தயாராகிவிட்டது அரசு நிர்வாகம். குன்றத்தூர் தாசில்தார் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய போலீசார் என பலர் இந்த தனியாருக்கு சொந்தமான கோவிலை இடிக்க குவிந்துள்ளனர்.
ஒரு சில பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் மூன்று நான்குபேர் மற்றும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சிலர் மட்டும் கோவில் அருகே குழுமியுள்ளனர். இந்துக்கள் ஒற்றுமை என கூறும் அல்லது தொண்டை கிழிய கதறும் பலர் தமிழகத்தில் தொடர்ந்து இடிக்கப்படும் கோவில்களை காப்பாற்ற எந்த வித முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள் என கூட்டத்தில் உள்ள பக்தர்கள் முணுமுணுக்கின்றனர்.
இந்நிலையில் கோவிலை சுற்றி பல குடியிருப்பு பகுதிகள் இருந்தாலும் பொதுமக்கள் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாய் கடந்து செல்வது குறிப்பிட்ட பெரும்பான்மை மக்களின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
மேலும் பிஜேபி அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளின் இந்த அராஜக போக்கை கண்டிக்காமல் கடந்து செல்கிறார்களே என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
….உங்கள் பீமா