Saturday, October 5, 2024
Home > செய்திகள் > துண்டிக்கப்பட்டதா நங்கநல்லூர்..! சூழ்ந்த வெள்ளம்..! டிமிக்கியடிக்கும் திமுக எம்.எல்.ஏ..!

துண்டிக்கப்பட்டதா நங்கநல்லூர்..! சூழ்ந்த வெள்ளம்..! டிமிக்கியடிக்கும் திமுக எம்.எல்.ஏ..!

7-11-21/ 15.45pm

சென்னை: சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நங்கநல்லூர் பகுதியை மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

இதுகுறித்து நமது மெட்ராஸ் டெலிக்ராம் நிருபரிடம் பேசிய நங்கநல்லூர் லக்ஷ்மி நகர் பகுதியை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ” சார் நேத்து நைட்லருந்து இங்க சரியான மழை. விடாம பெய்யுது. முன்னெச்செரிக்கையா நாங்க மாடில தங்கிட்டோம். காலைல பாத்தா வீடெல்லாம் தண்ணி.

இந்த பகுதி திமுக வட்ட செயலாளர் நடராசன் சார் கிட்ட காலைலயே போன் பண்ணி சொன்னோம். இதோ ஜேசிபிய உடனே அனுப்பறேன்னு ஏழு மணிக்கு சொன்னாரு. இப்போ வர அனுப்பல. தண்ணி சூழ்ந்துட்டே இருக்கு. எங்க தொகுதி எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் கிட்ட பேச ட்ரை பண்ணோம். அவர புடிக்க முடியல. திமுக கட்சிக்காரங்க கிட்ட பேச முயற்சி பண்ணா சரியா பதில் சொல்ல மாட்ராங்க.

`

மழை நின்னு தண்ணி வெளில போனாதான் எங்களால நிம்மதியா இருக்க முடியும். கொரோனா நேரத்துல வேற எந்த நோயும் வந்துட கூடாதுல்ல” என பரிதாபமாய் நம்மிடம் கேள்வியெழுப்பினார்.

```
```

பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் முதல்வர் ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்பது இயலாத ஒன்று. ஆனால் தொகுதி மக்களுக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது திமுகவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அதிமுகவினர் விமர்சிக்கின்றனர்.

……….உங்கள் பீமா