Friday, September 22, 2023
Home > செய்திகள் > தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்..!? பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்..!? பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்..!

7-11-21/ 17.00pm

ஸ்ரீரங்கம்; சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவருடன் கட்சி தலைவர்களும் உடன் சென்றிருந்தனர். வழக்கம்போல அவரது பாதுகாப்புக்கு காவலர்களும் சென்றிருந்தனர்.

அங்கு சாமி தரிசனம் முடித்த அண்ணாமலை கட்சித்தலைவர்களுடன் கோவிலில் உட்கார்ந்து உரையாடினார். கோவிலுக்கு சென்றவர்கள் அங்கு உட்காருவது மரபு. அதைகடைபிடித்து அமர்ந்தார் அண்ணாமலை. அதை குற்றம் என ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒருவர் விமர்சித்திருக்கிறார்.

`

மேலும் கோவிலின் ஆகம விதிகளை மதிக்காமல் கோவில் பிரகாரத்தை கட்சி அலுவலகமாக நடத்திய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். கோவில்களை பாதுகாக்காவிட்டாலும் அதன் ஆகமவிதிகளை அழிக்காமல் இருங்கள் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதற்க்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்திருக்கின்றனர். “தமிழகத்தில் கோவில்கள் திறப்பதற்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினார் அண்ணாமலை. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். கடவுள் மறுப்பாளர் முக ஸ்டாலின் வந்தபோது பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றிறீர்களே அபோது உங்களுக்கு சுடவில்லையா” என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

….உங்கள் பீமா