Friday, September 22, 2023
Home > செய்திகள் > சென்னைக்கு ரெட் அலெர்ட்…!ஸ்டிக்கர் ஒட்டியாவது திட்டத்தை தொடருமா திமுக..? பரிதவிக்கும் மக்கள்..!

சென்னைக்கு ரெட் அலெர்ட்…!ஸ்டிக்கர் ஒட்டியாவது திட்டத்தை தொடருமா திமுக..? பரிதவிக்கும் மக்கள்..!

7-11-21 / 13.25 pm

மத்திய அரசின் திட்டங்களிலும் அதிமுக அரசின் திட்டங்களிலும் தனது ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் திமுக ஸ்டிக்கர் ஒட்டியாவது இந்த திட்டத்தை தொடரவேண்டும் என சென்னை மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பயனுள்ள எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டம் மழைநீர் சேகரிப்புத்திட்டம். இந்த திட்டத்தால் சென்னையில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் மழைநீர் சேகர்ப்புத்திட்டம் அம்மா குடி நீர் திட்டம் மற்றும் சில பயன்தரும் திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். மழைநீர் சேகரிப்பை தொடர்ந்திருந்தால் சென்னை இன்று தவித்திருக்காது என அதிமுகவினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

`

முல்லைப்பெரியாறு காவிரி நீர் போன்றவற்றை நம்பி தமிழகம் இருக்க வேண்டிய நிலைமை இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து திமுக செயல்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. மேலும் கடந்த 2020 இதே போல கடும் மழையால் சென்னை பாதிக்கப்பட்டபோது அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வரும்,

” எடப்பாடி பழனிச்சாமியால் நிலைமையை சரிசெய்ய முடியவில்லை எனில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அழைக்கவேண்டும். எடப்பாடி அரசால் சமாளிக்க முடியவில்லை என ஒப்புக்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தார். இப்போது அதே கேள்வியை திமுகவை நோக்கி அதிமுகவினர் எழுப்புகின்றனர்.

………உங்கள் பீமா