Saturday, July 27, 2024
Home > செய்திகள் > பாஜக பேரணியில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்ட இஸ்லாமியருக்கு நேர்ந்த கதி..!

பாஜக பேரணியில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்ட இஸ்லாமியருக்கு நேர்ந்த கதி..!

25-12-21/11.16am

உத்திரபிரதேசம் : டிசம்பர் 2ல் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பாரத்மாதா கி ஜே என்றும் ஜெய் ஸ்ரீராம் எனவும் முழக்கமிட்டார். அதனால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் நிற்கும் அளவிற்கு மிரட்டல் வந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஷஹரன்பூரை சேர்ந்தவர் எஹ்சான் ராவ். இவர் கடந்த டிசம்பர் 2ல் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித்ஷா கலந்து தலைமையில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். தேசியவாதியான எஹ்சான் பேரணியின்போது கையில் பிஜேபி கொடியுடன் ஜெய்ஸ்ரீராம் பாரதமாதா கி ஜே என உணர்ச்சி மேலிட முழக்கங்களை எழுப்பினார்.

இதையடுத்து இஸ்லாமிய அடிப்படைவாத மௌலானாக்கள் மற்றும் அடிப்படைவாத இஸ்லாமியர்கள் எஹ்சானுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. தியோபந்த் அமைப்பை சேர்ந்த முஃப்தி “இந்த முழக்கங்கள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்காக எஹ்சான் வருந்த வேண்டும். இஸ்லாத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளார்” என தெரிவித்தார்.

`

இதுகுறித்து பேசிய எஹ்சான் “நாங்கள் ராமர் வழி தோன்றல்கள்.ராமர் எங்கள் மூதாதையர். அவரையும் நாம் வாழும் தேசத்தையும் போற்றுவதில் என்ன தவறு இருக்கிறது. ஜெய் ஸ்ரீராம் என்பது அன்பின் முழக்கம். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக ராமர் திகழ்கிறார்” என குறிப்பிட்டார். மேலும் இவருக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதால் பாஜக செய்தி தொடர்பாளரான டாக்டர் சுதன்ஷு திரிவேதியை சந்தித்து தனது பாதுகாப்பு குறித்த அச்சத்தை தெரிவித்தார்.

```
```

அதையடுத்து ஷஹரன்பூர் எஸ்.எஸ்.பி ஆகாஷ் தோமரை சந்தித்து தனது புகார் மனுவை அளித்தார். அதை தொடர்ந்து எஹ்சானுக்கு உத்திரபிரதேச காவல்துறை துப்பாக்கி ஏந்திய போலீசை காவலுக்கு நியமித்துள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அமைப்போ அல்லது கட்சியின் தலைவர் அல்லாத ஒருவருக்கு துப்பாக்கியேந்திய பாதுகாப்பு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

….உங்கள் பீமா