ஈழத்தமிழர்கள் எனும் இனத்தையே அழித்த கொடுங்கோல் ராஜபக்சே அரசு தற்போது உணவுக்கே நெருக்கடி நிலை அறிவித்திருக்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்த தமிழர்களை கொன்ற இலங்கை தற்போது அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்தது. கடந்த ஒண்ணரை ஆண்டுகளுக்கு மேலாக பரவும் கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா வருமானம் அறவே நின்றுபோனது. மேலும் இலங்கையின் FOREX என அழைக்கப்படும் அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லாமல் போய்விட்டது. 2019ல் பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ஷே தற்போதைய நிலைமையை சமாளிக்க வழி தெரியாமல் முழி பிதுங்கி வருகிறார்.
நேற்று ஜனாதிபதி கோத்தபாய அவசரகால அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “பொது பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் இலங்கையில் உணவுதானிய தட்டுப்பாடு நெருக்கடி காரணமாக வணிகர்கள் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை அரசு பறிமுதல் செய்யப்படும். மேலும் உணவை பதுக்குவோர் மீது அவசரகால நெருக்கடி சட்டத்தின் கீழ் கைதும் செய்யப்படுவார்கள்” என அறிவித்திருக்கிறார்.
2019 நவம்பரில் கோத்தபய பதவியேற்றபோது 7.5 மில்லியன் டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது ஜுலை 2021ல் 2.8 பில்லியனாக குறைந்துள்ளது. இதற்க்கு காரணம் இலங்கை அரசின் மோசமான இறக்குமதி கொள்கை தான் என கூறப்படுகிறது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களான மஞ்சள் சமையல் எண்ணெய் உட்பட பல உணவுப்பொருட்களின் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்திருப்பதாக செய்திகளை தெரிவிக்கின்றன. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முண்டியடித்து வரிசையில் நிற்கும் வீடியோ தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. மேலும் வரும் 12 மாதங்களுக்குள் வெளிநாட்டில் வாங்கிய 1.5 மில்லியன் டாலர்களை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை தத்தளிக்கிறது.
கடன்சுமையை குறைக்க 2020ல் 650 பில்லியன் டாலர் அச்சிடப்பட்டதாகவும் 213 பில்லியன் வெளிநாட்டில் வாங்கிய கடனுக்கு செலுத்தப்பட்டதாகவும் எக்கோணமி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடன்சுமையை குறைக்க நோட்டு அச்சடிப்பது பணவீக்கத்தை இன்னும் மோசமாக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை நீடித்தால் இந்த வருடம் முடிவதற்குள் கடும் உணவுப்பஞ்சம் வரும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து பேசிய இலங்கை அகதி ஒருவர் “கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்களின் ஆத்மா என்றென்றும் இலங்கையை மன்னிக்காது” என தெரிவித்தார்.
செய்தி ஆதாரங்கள்; அல் ஜஸீரா, தி வயர், தி எகோனோமிக் நெக்ஸ்ட்,அஸோசியேட்டட் பிரஸ்
..உங்கள் பீமா