Monday, December 2, 2024
Home > செய்திகள் > சமிக்ஞை மொழியில் பேசி பாகிஸ்தானை சாய்த்த இந்திய கடற்படை..! கடற்படைதின சிறப்புக்கட்டுரை..!

சமிக்ஞை மொழியில் பேசி பாகிஸ்தானை சாய்த்த இந்திய கடற்படை..! கடற்படைதின சிறப்புக்கட்டுரை..!

இந்தியா : 1971 டிசம்பர் 3 பாகிஸ்தானால் ஆரம்பிக்கப்பட்ட போர் பாகிஸ்தானையே படுகுழியில் தள்ள இந்திய கடற்படையின் சாதுரியம் பெரிதும் உதவியாக இருந்தது. அவர்களின் சமிக்ஞைமொழி பாகிஸ்தானை பெரிதும் குழப்பி சரணடைய வழி வகுத்தது.

உலகின் சிறிய போர் என அழைக்கப்படும் இந்தோ பாகிஸ்தான் போர் தோராயமாக 13 நாள் நடைபெற்றது. 1971 களில் வங்காள விடுதலைப்போர் (தற்போதைய பங்களாதேஷ்) வலுப்பெற்றது. விடுதலை வேட்கையை பங்களாதேசைச் சேர்ந்த பெங்கால் தேசியவாத இயக்கம் மக்களுக்கு ஊக்குவித்துக் கொண்டிருந்தது.

இதையறிந்த பாகிஸ்தான் ஆபரேஷன் சர்ச்லைட் எனும் பெயரில் படைகளை இறக்கி பங்களாதேஷை துண்டாட துணிந்தது. பாவம் மிக சிறிய நாடான பங்களாதேஷில் தற்காலிக அரசு அமைந்திருந்த நேரம் அது. பாய்ந்தன பாகிஸ்தான் படைகள். வான் வழி தரைவழி மற்றும் கடல்வழி என மும்முனைத்தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது தான் நமது இந்தியா பங்களாதேசுக்கு நேசக்கரம் நீட்டி ஆதரவாக அணைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் களம் இறங்கியது.

`

பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க யூரோப் சீனா, சிலோன் மற்றும் ஈரான், சவூதி அரேபியா, துருக்கி லிபியா,ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 11 நாடுகள் களம் இறங்கின. ஆனால் இந்தியாவுக்கு துணையாக ரஷ்யா மற்றும் தற்காலிக அரசான பங்களாதேஸ் மட்டுமே நின்றது. இதையெல்லாம் தாண்டி நமது வீரர்களின் அசாத்திய துணிச்சலும் போர் வியூகமும் சாதுர்யமான செயல்பாடுகளும் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது.

இந்திய கப்பற்படையின் பங்கு இந்த போரில் இன்றியமையாதது. பாகிஸ்தானின் முக்கிய கப்பல்களான பி.என்.எஸ்.கைபர் பி.என்.எஸ்.ஷாஜகான் உள்ளிட்ட முக்கிய நாசகார கப்பல்களை இந்திய கப்பற்படை அழித்தொழித்தது. போரின் போது பகிரப்படும் தகவல்கள் ஒட்டுக்கேட்கப்படலாம் என கருதி கப்பற்படை புது யுத்தியை கையாண்டது. ஆம் யாருமே எதிர்பாரா வகையில் ரஷிய மொழியில் தகவல் பரிமாறப்பட்டது. மேலும் கராச்சி துறைமுகம் இந்திய கடற்படையினரால் துவம்சம் செய்யப்பட்டது.

இந்திய கடற்படை மூத்த அதிகாரிகளான அட்மிரல் சர்தாரிலால் வைஸ் அட்மிரல் சௌரேந்திர கோஹ்லி, வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் ஆர்.அட்மிரல் குருவிலா மற்றும் ஆர்.அட்மிரல் எஸ்.ஹெச்.ஷர்மா ஆகியோரின் புத்தி சாதுரியமான துணிச்சலான நடவடிக்கைகளால் டிசம்பர் 16 அன்று பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்தது. இந்த போரில் பாகிஸ்தான் தரப்பில் 1900 பேர் கொல்லப்பட்டனர். 1413பேர் சரணடைந்தனர்.

```
```

இந்திய தரப்பில் 194 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு போர்க்கப்பல் ஒரு விமானம் சேதமடைந்தது. மேலும் ஓகா துறைமுகம் பெரிதும் சேதமடைந்தது. இந்திய கடற்படை முன்னெடுத்த இரண்டு பெரிய ஆபரேஷன்களான ஆபரேஷன் டிரைடென்ட் மற்றும் ஆபரேஷன் பைதான் இன்றும் இந்திய கப்பற்படை வரலாற்றில் பெரிதும் பேசப்படுகிறது. இந்த போரை தொடர்ந்து இந்திய கடற்படைதினமாக டிசம்பர் 4 இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜெய்ஹிந்த்.

…….உங்கள் பீமா