Friday, March 24, 2023
Home > செய்திகள் > உல்லாச படகில் ஹெராயின்..! ஷாருக்கான் மகன் கைது..!

உல்லாச படகில் ஹெராயின்..! ஷாருக்கான் மகன் கைது..!

நேற்று மும்பை கடலோர பகுதியில் ஒரு உல்லாச படகில் போதை விருந்து நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த படகில் ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

அதன்பின்னர் படகில் இருந்த எட்டுபேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் அர்பாஸ், முன்முன் தாமெச்சா, நுபுர் சரிகா இஸ்மீத் சிங், மொஹாக் ஜாஸ்வால், விக்ராந்த் கோமிட் சோப்ரா உள்ளிட்ட எட்டுபேரை கைது செய்த போலீசார் நேற்று இரவு முதல் விசாரித்து வருகின்றனர்.

இதே போதைமருந்து பிரச்சினையால் கடந்த வருடம் சுஷாந்த் சிங் என்ற நடிகர் இறந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் போதைபொருள் பயன்பாடு சர்வசாதாரணமாகிவிட்டது. காவல்துறையும் கண்டுகொள்வதில்லை என மும்பைவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

`

……உங்கள் பீமா

#sharukhan #aaryankhan #ncbraid #mumbai