பாரத பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி பிரதமர் மோடி எனும் திரைப்படத்தை இயக்கிய மகேஷ் மஞ்சுரேஹர் தனது அடுத்த படைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காந்தியை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் கோட்ஸேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது.
நேற்று காந்தியின் 152ஆவது பிறந்த தினத்தையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சந்தீப் சிங் கோட்ஸே வரலாறு திரைப்படமாக இருப்பதாக தெரிவித்தார். அந்த திரைப்படத்தை மகேஷ் மஞ்சுரேகர் இயக்குவதாகவும் தெரிவித்தார்.
இந்த திரைப்படம் அடுத்த 2022 காந்தி பிறந்த நாள் அன்று வெளியாகவிருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நேற்று படத்துக்கான போஸ்டரை வெளியிட்ட தயாரிப்புக்குழு சர்ச்சைக்கு அடிகோலியிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த போஸ்டரில் ” பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாபு இப்படிக்கு உங்கள் கோட்ஸே” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதை கவனித்த காங்கிரஸ் ஆதரவாளர்கள் இப்போதே படத்திற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
…..உங்கள் பீமா
#godse #gandhi #biopic