Sunday, October 1, 2023
Home > செய்திகள் > இந்திய கடற்படை தினத்தை அவமதித்ததா காங்கிரஸ்..? ராகுலை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

இந்திய கடற்படை தினத்தை அவமதித்ததா காங்கிரஸ்..? ராகுலை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

4-12-21/15.22pm

டெல்லி : இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருக்க இந்திய கடற்படையை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநில பள்ளி உயர்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா. இவர் கடற்படை தினமான இன்று வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் இந்திய விமானப்படையின் புகைப்படத்தை பகிர்ந்து கடற்படைக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். மேலும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைமையும் அதே போல விமானப்படையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

`

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் பலர் புகைப்படங்களை மாற்றி வாழ்த்து கூறுவதும் முக்கியமான தினங்களை மாற்றி கூறுவதும் திமுக போல வாடிக்கையான ஒன்று. இந்த அழகில் நாட்டின் தலைமையேற்க எந்த தகுதி இருக்கிறது காங்கிரஸாருக்கு என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பள்ளி உயர்கல்வித்துறை அமைச்சரே தவறான முன்னுதாரணமாகிவிட்டால் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என பல்வேறு தரப்பினர் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா