Thursday, May 21, 2026
Home > செய்திகள் > கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டும்..!! செய்யாவிட்டால் ஜெயில்..!! காரணம் என்ன தெரியுமா?

கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டும்..!! செய்யாவிட்டால் ஜெயில்..!! காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் இரண்டு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்.இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமானால் முதல் மனைவி இறந்து விட்டாலோ அல்லது சட்டப்படி விவாகரத்து பெற்றால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்.இந்நிலையில் தற்போது இந்திய சட்டத்துக்கு அப்படியே எதிராக இரண்டு பெண்களை கட்டாயமாக திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் எரித்ரியா நாட்டில் விதிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா நாடான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. திருமணம் இல்லாவிட்டால் சிறைக்கு செல்வார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்கா நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியா நாடு.

எரித்திரியா மிகச்சிறிய நாடு.அங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது.அந்நாட்டு ஆண்கள் அடிக்கடி போர்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து வருகிறது.அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.எனவே பெண்களுக்கு திருமணம் செய்ய போதிய ஆண்கள் கிடைக்கவில்லை.இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர்.

எரித்திரியா நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் எரித்திரியா நாட்டின் அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்ய கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்த பட்டுள்ளது. ஆண்கள் இரண்டு திருமணம் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.