Friday, March 29, 2024
Home > செய்திகள் > விவசாயிகள் போராட்டம். ஏமாற்றுவேலை.? சிறப்புக்குழு வெளியிட்ட அறிக்கை..! தீர்க்கதரிசி மோடி

விவசாயிகள் போராட்டம். ஏமாற்றுவேலை.? சிறப்புக்குழு வெளியிட்ட அறிக்கை..! தீர்க்கதரிசி மோடி

21-3-22/16.01pm

புதுதில்லி : இந்திய விவசாயிகளின் பொருளாதாரத்தையும் அவர்கள் வாழ்வின் முன்னேற்றத்தையும் கருதி மத்திய பிஜேபி அரசு மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்தது. அதை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா பகுதி விவசாயிகள் மட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் இது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என வசைபாட ஆரம்பித்தன. தி பிரிண்ட், வயர் என்.டி.டிவி உட்பட பல பிரபல கையூட்டு மீடியாக்கள் விவசாயிகள் போராட்டத்தை தலைப்புச்செய்தியாக்கின. மேலும் விவசாயிகள் போராட்டம் என்கிற பெயரில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஒரு பெண் சமூக செயற்பாட்டாளர் கற்பழிக்கப்பட்டார். பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது. நவம்பர் மாதம் 2021 ல் அமைக்கப்பட்ட இந்த குழுவில் அனில் கனவாட், பரமோத்குமார் ஜோஷி, அசோக் குலாட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழு தற்போது அந்த அறிக்கையை மீடியாக்களில் வெளியிட்டுள்ளது.

`

அந்த அறிக்கையின்படி 3.83 கோடி விவசாயிகளை கொண்ட 63 சங்கங்கள் மற்றும் காணொளி மூலம் பேசிய 3.3கோடி எண்ணிக்கை கொண்ட 73 விவசாய சங்கங்கள் இந்த வேளாண்சட்டங்களை ஆதரிக்கின்றன. ஆனால் 54 லட்ச விவசாயிகள் மட்டுமே இந்த சட்டங்களை எதிர்க்கின்றனர். மேலும் மீண்டும் வேளாண்சட்டங்கள் அமுல்படுத்துவது குறித்து பேச விவசாய சங்கங்கள் தயாராக இருக்கின்றன” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேளாண்சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதால் விவசாயிகளுக்கு வருடம்தோறும் 40பில்லியன் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற செயலினாலும் அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி போராட்டத்தை ஊக்குவித்த அடையாளம் காணமுடியாத துரோகிகளாலும் உண்மையான விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

```
```

மூன்று சட்டதிருத்தங்களையும் பிரதமர் திரும்ப பெறும்போது கூறிய வார்த்தைகள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். ” இந்த சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளுக்கு புரியும்படி எடுத்துக்கூற தவறிவிட்டேன். அதனால் மன்னிப்பு கோருகிறேன்” என கூறியிருந்தார். விவசாயிகள் நலன் காக்க மோடி கொண்டுவந்த நல்ல திட்டத்தை போராட்டம் எனும் பெயரில் திரும்பப்பெற வைத்துவிட்டு இப்போது 40 பில்லியன் இழப்பு என கதறுவது எந்த விதத்தில் நியாயம் என்றும்,

இதே சிறப்புக்குழு தான் 2021ல் வேளாண்சட்டங்களை 86 சதவிகித விவசாயிகள் எதிர்க்கிறார்கள் என கூறிவிட்டு தற்போது விவசாயிகள் ஆதரவு தர தயாராய் இருக்கிறார்கள் என பூசி மெழுகுவது தேர்தலை மனதில்கொண்டு திட்டமிட்டு செய்யப்பட்டது என நடுநிலையாளர்கள் விமர்சிக்கின்றனர்.

…..உங்கள் பீமா