22-3-22/10.34am
சீனா : போயிங் 737-800 உள்நாட்டு பயணிகள் விமானம் நேற்று காலை 11.35 மணியளவில் பெரும் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் மரணமடைந்தனர்.
இந்த MU 5736 போயிங் விமானம் 123 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் குவாஞ்சூவிலிருந்து குன்மிங் சென்று கொண்டிருந்தது. 0620GMT யில் 29.100 அடியில் பறந்துகொண்டிருந்த விமானம் அடுத்த இருநிமிடங்களில் 9075 அடியை தொட்டிருந்தது.

விமான நிலைய அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் 3000 அடியை நெருங்கிய விமானம் டெங் கவுண்ட்டி மலைப்பகுதியில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் மேலெழுந்து பறந்த விமானம் தலைகீழாக மலையை நோக்கி பயணிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன.
விபத்துக்குள்ளான விமானம் சைனா ஈஸ்டர்ன் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
இந்த விபத்து மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.
…..உங்கள் பீமா
