Saturday, October 5, 2024
Home > செய்திகள் > இந்தியா மீது சைபர் அட்டாக்..? ஹேக் செய்யப்பட பாரத பிரதமர் மோடியின் ட்விட்டர்..!!

இந்தியா மீது சைபர் அட்டாக்..? ஹேக் செய்யப்பட பாரத பிரதமர் மோடியின் ட்விட்டர்..!!

12-12-21/8.36am

இந்தியா : பாரத பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட் நள்ளிரவில் சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டது. இது இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட சைபர் அட்டாக் என கூறப்படுகிறது.

மறைந்த மரியாதைக்குரிய முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இந்தியாவின் மீது பயோ வார் மற்றும் சைபர் வார் தொடுக்கப்பட்ட சாத்திய கூறுகள் உள்ளதாக கூறியிருந்தார். அதை நிரூபிக்கும் விதமாக நேற்று பாரத பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி பேசியிருந்த விஷயம் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

மோடி கூறுகையில் ” சர்வதேச அளவில் சமூக ஊடகங்கள் மற்றும் பிட்காயின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்ற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் மத்திய அரசு பிட்காயின் செயல்பாடுகளை அங்கீகரிக்க முடியாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இதனால் டார்க் வெப் சமூகத்தினர் இந்த சேட்டையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

`

மேலும் அக்கவுண்ட்டை ஹேக் செய்த மர்ம நபர்கள் பிரதமர் மோடியின் ட்வீட் வாயிலாக ” பிட்காயின் செயல்பாடுகளை மத்திய அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 500 பிட்காயின்கள் வழங்கப்பட இருக்கிறது” என பதிவிட்டிருந்தது. இதையறிந்த உயரதிகாரிகள் ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக கணக்கை மீட்டெடுத்தனர்.

```
```

மேலும் பாரத பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுண்டிற்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிரதம அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் போடப்பட்ட டீவீட்டுக்களை யாரும் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. சமீபத்தில் தமிழக ஆளுநரின் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா