Thursday, June 20, 2024
Home > செய்திகள் > முடங்கியது கோயம்புத்தூர்..! பழி வாங்குகிறதா திமுக..! கண்ணீர் விடும் பொதுமக்கள்

முடங்கியது கோயம்புத்தூர்..! பழி வாங்குகிறதா திமுக..! கண்ணீர் விடும் பொதுமக்கள்

8-2-22/12.00pm

கோயம்புத்தூர் : கருணாநிதியே கோயம்புத்தூரில் பிறந்தவர் தான். வேளாண்பல்கலை கழகம் முதன்முதலாக கோயம்புத்தூரில் தான் தொடங்கப்பட்டது என பக்கம் பக்கமாக தமிழக முதல்வர் மூச்சுவிடாமல் பேசினாலும் கோயம்புத்தூர் மக்களின் நிலைமை அதலபாதாளத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது என கோயம்புத்தூர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் செல்வகுமார் எனும் அரசியல் விமர்சகர் இதுகுறித்த தெளிவான விவரங்களை பதிவிட்டுள்ளார். அது தற்போதைய கோயம்புத்தூர் மக்களின் அவலநிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. அவர் தனது பதிவில் “திமுக ஆட்சியில் எப்போதுமே தொழில் நன்றாக நடந்ததாக சரித்திரமே இல்லை. தினசரி “கலெக்சன்” மட்டுமே குறியாக இருக்கும் அமைச்சர்களால் எந்தவிதமான தொழில் வளர்ச்சியும் 9 மாதத்தில் நடக்கவில்லை. மாறாக கொங்கு பகுதியை குறிவைத்து பல தொழில்களை முடக்கி வைத்துள்ளது கோபாலபுர அரசு.

உலகில் உற்பத்தி ஆகும் வெட் கிரைன்டர்களில் 75% உற்பத்தி செய்கிறது. வருடம் ரூ1800 கோடி வருவாய் ஈட்டும் தொழில் இது. இந்த தொழில் கடந்த ஆகஸ்ட் முதல் இன்று வரை 6 மாதங்களாக முடங்கி கிடக்கிறது. கோபாலபுர அரசு இந்த தொழிலை மீட்க எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. கிரைண்டர் கல் குவாரிகள் தடை செய்யபட்டதால் கிட்டதட்ட 50,000 பேர் வேலை இழந்துள்ளனர். திருப்பூர் ஊத்துகுளி பகுதியில் மட்டும் 2350 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்த வேலை உணவிற்கே சிரமமான நிலையில் இருக்கிறார்கள்.

`

தமிழ்நாட்டிற்கே செங்கல் உற்பத்தியில் முன்னோடியாக இருந்து வந்தது கோவை தடாகம் செங்கல் சூளைகள். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் 10% செங்கல் இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது. இந்த தொழிலை முறைபடுத்த சரியான சட்டம் இல்லை. இதனால் முடக்கி வைக்க பட்டுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் 25,000 பேர் வேலை வாய்ப்பை இழந்துவிட்டனர். சந்தையில் செங்கல் விலை ரூ.8ல் இருந்து 14 ரூபாய் ஆக இந்த தடைதான் காரணம்.

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த திமுக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வை பெற்று தர அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பு கொண்து. ஆனால் இதுவரை அதை செயல்படுத்தவில்லை. 8 வருடங்களாக கூலி உயர்வு தரவில்லை. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்ளில் நடக்கும் தென்னைநார் (Coir Pith) தொழில்களுக்கு திடிரென அரஞ்சு மாசு கட்டுபாடு விதித்துள்ளது கோபாலபுர அரசு. இதை அமல்படுத்த பல லட்சம் முதல் பல கோடிகள் வரை முதலீடு தேவைப்படும்

```
```

ஆண்டுக்கு ரூ3500 கோடி அந்நிய செலவாணி ஈட்டி தரும் தொழில் சிக்கலில் இருக்கிறது
கோவை, திருப்பூர் மாவட்டம் மட்டுமே இந்தியாவின் 50% காயர் ஏற்றுமதி செய்கிறது இரண்டு லட்சம் வேலை வாய்ப்பு சிக்கலில் உள்ளது. விவசாயிகளுக்கு ஒரு தேங்காய் மட்டைக்கு ரூ2 வரை கிடைத்து வந்தது இனி வாய்ப்பில்லை. பல கோடிகளை வசூல் செய்த கோபாலபுரம் அரசு இன்றுவரை சரியான தீர்வை கொடுக்கவில்லை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

….உங்கள் பீமா