ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்கள் விலை போய்விட்டதாக நடுநிலையாளர்கள் கவலையுடன் கருத்து தெரிவிக்கும் இந்த விலையில் இன்று புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. நியூஸ் லாண்டரி மற்றும் நியூஸ் க்ளிக் எனும் இரண்டு செய்தி போர்ட்டல்கள் பணமோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி சர்வோதயா என்கிளேவில் செயல்பட்டுவரும் நியூஸ் லண்டரி செய்தி போர்டல் அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12 மணிக்கு நுழைந்த வருமான வரித்துறையினர் இன்று நண்பகல் 12.40 வரை சோதனை நடத்தியதாக நியூஸ் லாண்டரி அலுவலகம் தெரிவிக்கிறது.
இதே நேரத்தில் சிடுலாஜாப் பகுதியில் செயல்பட்டு வரும் நியூஸ் க்ளிக் எனப்படும் மற்றொரு செய்தி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இந்த செய்தி நிறுவனங்கள் பினாமி பெயரில் இயங்குவதாகவும் இந்திய இடது சாரி அமைப்புகள் நடத்துவதாகவும் செய்திகள் உலவுகிறது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் பண மோசடி செய்திருப்பதாக இந்த செய்தி போர்ட்டல்களின் மீது புகார் எழுந்துள்ளது.
நியூஸ் லாண்டரி செய்தி நிறுவனர் அபிநந்தன் கூறுகையில், நாங்கள் வருமானவரி துறைக்கு எங்கள் முழு ஒத்துழைப்பை அளித்தோம்” என கூறினார். ஆனால் ஜூன் 30 ஆண்ட்ரே வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நேரில் வந்து விளக்கம் கொடுக்குமாறு சம்மன் அனுப்பியும் இந்த இரண்டு செய்தி போரட்டல்களும் ஆஜராகவில்லை.
மேலும் இவர்களது வங்கி கணக்கில் முறையற்ற பரிவர்த்தனை மற்றும் அவ்வப்போது பெரிய தொகை செலுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
…உங்கள் பீமா