31-1-22/12.00pm
சென்னை : சென்னையில் வெளிமாநிலத்திலிருந்து சிறுமிகள் கடத்திவரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் எடுத்த நடவடிக்கையில் சலீமா எனும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திரிபுரா மாநிலம் சுனாமுகி கிராமத்தை சேர்ந்தவர் சலீமா.இவரது கணவர் அன்வர். இவர்கள் சிறுமிகளை திரிபுராவிலிருந்து சென்னைக்கு பியூட்டி பார்லரில் வேலை என அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திவந்துள்ளனர். கடந்த ஜனவரி 17 அன்று நான்கு சிறுமிகளை அழைத்து வந்த அன்வர் கேளம்பாக்கம் படூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சிறுமிகளை தங்க வைத்துள்ளான்.

சலீமா மொய்னுதீன் மற்றும் ஆலம்கீர் என மூவர் கொண்ட கும்பல் சிறுமிகளை தாக்கி காயப்படுத்தியிருக்கிறது. மேலும் அவர்களை அந்தரங்கமாக படம் பிடித்து வைத்துக்கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியிருக்கின்றனர். 17ம் தேதியிலிருந்து 26 வரை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு சிறுமியும் தினமும் 50000 வரை பணம் சம்பாதிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தினமும் மாலை 7 முதல் மறுநாள் காலை ஏழுமணிவரை பலருடன் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சைல்ட் வெல்பேர் கமிட்டி உறுப்பினர் லலிதா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த 26 குடியரசுதினத்தன்று மர்மநபர் ஒருவரிடமிருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்துள்ளது.
அதன்பிறகு மறைமுக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை சலீமாவை மட்டும் கைது செய்துள்ளது. சென்னை பூக்கடை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெங்களூரு வுக்கு தப்பியோடியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சலீமா மட்டும் கைதுசெய்யப்பட்ட நிலையில் மற்ற மூவர் தப்பியோடிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலீமாவின் கணவர் தான் அன்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பணியை சரிவர செய்யவில்லை என கூறி தாம்பரம் கமிஷனர் ரவி கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் உள்ள தலைமை கான்ஸ்டபிள் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்களை இடமாற்றம் செய்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து சிறுமிகளை அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் அதிகரித்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர் பாத்திமா பயஸ் கருத்து கூறியுள்ளார்.
….உங்கள் பீமா