பஞ்சாப் மாநிலத்தில் 25000த்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளை காங்கிரஸ் அரசு கைது செய்யாமல் தப்பியோட விட்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் அவர்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்த நினைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.
இன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மீ எம் எல் ஏவும் எதிர்கட்சி சட்டமன்ற தலைவருமான ஹர்பால் சிங் சீமா பேசுகையில் ” பஞ்சாபில் நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. காங்கிரஸ் அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களில் அவர்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்த முடிவு செய்து அவர்களை காவல்துறை கைது செய்துவிடாமல் பாதுகாக்கிறது.
மாநிலத்தில் கூலிப்படையினர், போதை பொருள் கடத்தல் ஆட்கடத்தல், விபச்சார கும்பல், ஹவாலா கும்பலை சேர்ந்த 25000த்திற்கும் மேற்பட்டோரை கைது செய்யாமல் விடுத்திருக்கிறது. பட்டப்பகலில் சந்தைகளில் இளைஞர்கள் ரவுடி கும்பலால் கொல்லப்படுகின்றனர். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
வழக்கு பதியப்பட்டும் கொடூர குற்றவாளிகளை ஏன் காங்கிரஸ் அரசு கைது செய்யாமல் தப்பிக்க விடுகிறது. வரப்போகும் தேர்தலில் அவர்களை பகடை காயாக்கி அரசியல் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.” என தெரிவித்தார். மேலும் முதல்வர் அமரீந்தர் மற்றும் காவல்துறை உயரதிகாரி டிங்கார் குப்தா இருவரும் இதுகுறித்த விளக்க அறிக்கையை வெளியிடுமாறு கோரிக்கையை முன்வைத்தார்.
…உங்கள் பீமா