Saturday, July 27, 2024
Home > அரசியல் > குஜராத் அரசியலில் திடீர் திருப்பம்..! முதல்வர் ராஜினாமா..!!

குஜராத் அரசியலில் திடீர் திருப்பம்..! முதல்வர் ராஜினாமா..!!

1956 ஆகஸ்ட் 2 ல் பிறந்த விஜய் ரூபானி பர்மா ரங்கூனை சேர்ந்தவர் ஆவார். 1960களில் பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடியால் அவரது குடும்பம் குஜராத் ராஜ்கோட்டிற்கு இடம்பெயர்ந்தது. தர்மேந்தர் சிங் கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டம் வென்ற ரூபானி தனது சட்டப்படிப்பை சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

மாணவனாய் இருக்கும்போதே 1971ல் பிஜேபியின் ஜனசங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தியின் எமெர்ஜெண்சி அறிவிப்பின்போது மிசாவில் சிறையிலடைக்கப்பட்டார். இவரது முழு நேர அரசியல் பயணம் 1987ல் ஆரம்பித்தது. 1996ல் ராஜ்கோட் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார்.

2006 முதல் 2011 வரை எம்பியாக இருந்த ரூபானி 2015ல் குஜராத் மாநில பிஜேபி தலைவரானார். 2016 ம் ஆண்டு ஆனந்தி பென் வழிவிட குஜராத்தின் 16 வது முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

`

சற்று முன் மாநில ஆளுநரை சந்தித்த விஜய் ரூபானி டிஹானது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், ” குஜராத்தின் வளர்ச்சி மென்மேலும் பெருகவேண்டும். மாநிலத்தின் வளர்ச்சி புதிய தலைமையின் கீழ் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும். அதனாலேயே நான் என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

கடந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு தேர்தலுக்கும் மக்கள் எனக்களித்த ஒத்துழைப்பும் ஆதரவும் மறக்க முடியாதது. இனி தலைமை எனக்கு அளிக்க போகும் புதிய பதவியில் என்னுடைய கடமையை சிறப்பாக செய்வேன்.” என கூறினார்.

```
```

வருகிற செவ்வாய்க்கிழமை குஜராத்தின் முதல்வர் யார் என்ற அறிவிப்பை பிஜேபி வெளியிடும் என மாநில பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியினர் பல்வேறு வாதங்களை முன்வைக்கையில், எந்த ஒரு எதிர்ப்பு குரலோ மறுப்போ சொல்லாமல் புதிய தலைமைக்கு வழிவிடும் அந்த மனப்பக்குவம் மற்றும் அரசியல் ஞானம் பிஜேபியில் மட்டுமே காணப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

..உங்கள் பீமா