12-11-21/16.48pm
சென்னை: நிவாரணப்பணி நடைபெறாததை கண்டித்து போராடிய மக்களை திமுகவினர் தாக்கியதால் சென்னையில் பதட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த சிலநாட்களாக பெய்த தொடர் மழையால் சென்னையின் பல முக்கியமான இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
மேலும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான பகுதியான தி நகரில் பாலத்திற்கடியில் பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து வெள்ளத்தில் சிக்கி பின்னர் மீட்கப்பட்டது.
சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலமணிநேரங்கள் ஆகியும் சரிசெய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் செயின்ட் மேரிஸ் பகுதி மக்கள் தங்கள் தெருக்களில் வெள்ளநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த போராட்டத்தில் புகுந்த திமுகவினர் பொதுமக்களை அடித்து விரட்டினர். அருகில் இருந்த போக்குவரத்து காவலர்கள் நிலைமையை சீர்செய்ய முயன்றனர். பொதுமக்களில் சிலர் காயம்பட்டதாக சொல்லப்படுகிறது. திமுகவினரின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா