Saturday, October 5, 2024
Home > செய்திகள் > முக.ஸ்டாலின் HR&CEவின் தலைமையேற்க தடை கோரிய வழக்கை நிராகரித்த கோர்ட்!திமுகவினர் கொண்டாட்டம்!!

முக.ஸ்டாலின் HR&CEவின் தலைமையேற்க தடை கோரிய வழக்கை நிராகரித்த கோர்ட்!திமுகவினர் கொண்டாட்டம்!!

முக.ஸ்டாலின் இந்துசமய அறநிலையதுறையின் ஆலோசனைக்குழுவின் தலைமையேற்க்கும் முன் கடவுள் முன்பு நான் இந்து தான் என சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும் என வழக்கறிஞர் ஸ்ரீதரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார்.


(HR&CE சட்ட விதிகளின்படி இந்துக்கள் அல்லாதோர் பணிபுரிய முடியாது. மேலும் பணியில் சேரும் முன் இந்து கடவுள் முன் சத்திய பிரமாணம் எடுக்கவேண்டும் என்பது விதியாகும்.)

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதல் அமர்வு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் PD ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று கூறியது.

`

அந்த தீர்ப்பில் “எந்த மதமும் குறுகிய மனப்பான்மையையோ மற்றவர்களை காயப்படுத்தவோ போதிக்கவில்லை. மனுதாரர் அளித்த மனு பாராட்டப்படக்கூடியதோ அல்லது பொறுக்கிக்கொள்ளவோ கூடியது அல்ல. வழக்கறிஞரான ஸ்ரீதரனின் மனு ஒருதலைப்பட்சமாக உள்ளது. இனி அவர் ஐந்து வருடங்களுக்கு எந்த ஒரு பொதுநல வழக்கும் தாக்கல் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும் முக ஸ்டாலின் ஆலோசனை குழுவில் இடம்பெற எந்த ஒரு தடையும் இல்லை” என தீர்ப்பளித்தது.

```
```

இந்துக்களின் விரோதிகள் என திமுகவை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில் வெளிவந்திருக்கும் இந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, திமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கியிருப்பதாக திமுக தரப்பில் குறிப்பிடுகின்றனர். முக ஸ்டாலின் தலைமையில் இயங்கப்போகும் HR&CE இனியாவது புத்துயிர் பெறுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

…உங்கள் பீமா