கடந்த 3 ஆகஸ்ட் 2021ல் கொரோனா விதிமுறைகளை மீறி தனிமனித இடைவெளியின்றி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அதற்கு திமுக அரசு பாதுகாப்பு கொடுத்தது.
அதயடுத்து வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொரோனா தொற்றை காரணம் காட்டி தடை விதித்தது. தற்போது மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இன்று கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சென்னையில் போராட்டம் நடத்தினர்’
இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் சிறைத்துறை தலைமை அலுவலகம் முன்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தண்டனை காலம் முடிந்து 20 வருடங்கள் மேலாகியும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் பாரபட்சம் காட்டும் சிறைத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்குகொண்டனர்.
சிறைக்கைதிகளை விடுவிக்க சொல்லி போராட்டம் நடத்துவது சமூக குற்றங்களை அதிகரிப்பதோடு நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும். இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் திமுக அரசு 700 கைதிகளை விடுவிப்பதாக அறிவிப்பு கொடுத்த அன்றே இந்த போராட்டம் நடைபெறுவது நெருடலாக உள்ளது என இந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
..உங்கள் பீமா